1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? வாட்ஸ் அப்பில் குரல் பதிவை எழுத்து வடிவில் மாற்றும் புதிய அப்டேட்..!

1

பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஆங்கிலம், குரல் பதிவாக அனுப்பபடும் குறுஞ்செய்திகளை அதே மொழியில் எழுத்து வடிவமாக மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி குரல் பதிவுகளை எழுத்து வடிவமாக மாற்ற வேண்டிய தேவை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட உள்ளது. இந்திய பயனர்களுக்காக, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like