இது தெரியுமா ? தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம்..!

முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பறவைகள் சரணாலையம் அமைக்கபட்டுள்ளது.
இதனால் ஒவ்வொறு ஆண்டும் அந்த கிராமத்திற்கு கூழைக்கிடா, செந்நாரை, அரிவாள் மூக்கன், சிறகி, பாம்புதாரா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வெளி நாட்டு பறவைகள் வருவது வழக்கம்.
இந்நிலையில் தங்கள் கிராமத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டு பறவைகளை பாதுகாக்கும் வகையில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து கிராம மக்கள் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.