1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? வெறும் பட்டன் போனில் இருந்ததே UPI கட்டணம் செலுத்தலாம்..!

1

பட்டன் போனில் இருந்து ஆன்லைனில் UPI கட்டணம் செலுத்த மூன்று எளிய வழிமுறைகள் உள்ளன. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் பரிவர்த்தனையின் போது இணைய இணைப்பு தேவையில்லை. அதாவது, போன் கால் மூலம் UPI முறையில் யாருக்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.

பட்டன் போன்களில் UPI123Pay வசதியைப் பெற, நீங்கள் சில முக்கியமான விஷயங்களைச் செய்ய வேண்டும். இதற்கு முதலில் வங்கியில் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். டெபிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி UPI பின் நம்பரை உருவாக்க வேண்டும். இதற்குப் பிறகு, UPI கட்டணம், LPG பில், மொபைல் ரீசார்ஜ், EMI ஆகியவற்றை எளிதாகச் செலுத்தலாம். பயனர்கள் தங்கள் கணக்கின் பேலன்ஸ் குறித்து கூட அறியலாம். இதுபோன்ற நிறைய வசதிகள் உள்ளன. 

சாதாரண போன் வைத்திருப்பவர்கள், முதலில் தங்களின் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும். டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்து, யுபிஐ பாஸ்வேர்டு உருவாக்க வேண்டும். அதன்பிறகு பரிவர்த்தனை செய்யலாம். பணம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரது மொபைல் எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். பின்னர், அனுப்ப வேண்டிய பணத்தை உள்ளீடு செய்து, பாஸ்வேர்டு போட்டால் பணம் பரிவர்த்தனை ஆகிவிடும்.

இந்த புதிய முறையில் இணைய வசதி இல்லாமலேயே பரிவத்தனை மேற்கொள்ளலாம் என்பது தான் சிறப்பு. மேலும் இந்த சேவையில் பணம் அனுப்புவது மட்டுமின்றி கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றை செய்யலாம். வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம, ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் இடங்களிலும் கூட இந்த சேவை மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like