இது தெரியுமா..? Blue Star என்ற சிபிஎஸ்இ பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர், அண்ணன் திருமாவளவன் என்பவரே.. - அண்ணாமலை..!

அண்ணாமலை இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
திமுகவுடன் கூட்டணி அமைத்து, திமுகவினர்களைப் போலவே இரட்டை வேடம் அணிவதற்கான வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டாரென நான் எதிர்பார்த்தேன். இது எனக்கு ஒரு ஏமாற்றமாகவே உள்ளது.
சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர், அண்ணன் திருமாவளவன் என்பவரே.
அரசுப் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு மும்மொழிகள் தேவையில்லையெனக் கூறும் அனைவரும், மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன் ஏதோ ஒரு தொடர்பில் இருக்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
— K.Annamalai (@annamalai_k) February 20, 2025
சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற… https://t.co/X8EGTAuSjI pic.twitter.com/6EuqlnvPG1