1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? ஜெய் ஹோ பாடல் முதலில் உருவாக்கப்பட்டது இந்த பாலிவுட் நடிகருக்காம்...

1

1992 ஆம் ஆண்டு முதல், தற்போது வரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், இங்கிலிஸ் ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார்  ஏ.ஆர்.ரகுமான். 

மேலும், ஏராளமான படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.  கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக் சினிமாவில் இசையமைப்பாளர் என்பதை தாண்டி, பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என தனி முத்திரை பதித்துள்ளார். 

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது வென்ற கொடுத்தது Slumdog Millionaire படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்ற பாடல் தான். 

ஆனால் இந்த பாடல், முதல் முதலில் அவர் வேறொரு நடிகருக்கு தான் உருவாக்கினார் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுவும் சல்மான் கானின் Yuvvraaj படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல் தான் அது. அந்தப் பாடல் வேண்டாம் என்று சல்மான் கான் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்படி அவர்கள் மறுத்த அந்த ஜெய் ஹோ பாடலைத் தான் இங்கிலாந்து இயக்குநர் டேனி பாய்லே இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான Slumdog Millionaire படத்தில் பயன்படுத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடல் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு, வெளிநாட்டு படங்களின் ஒரிஜினல் பாடல் பிரிவில் 2 ஆஸ்கர் விருதுகளை அவருக்கு வென்று கொடுத்தது.

Trending News

Latest News

You May Like