1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? உலக சாதனைப் படைத்த ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான்!

1

திரை வாழ்க்கையில் பல சாதனைகளைப் புரிந்திருக்கும் ரஜினி தற்போது மீண்டும் ஒரு சாதனையைப் படைத்துள்ளார். அபூர்வ ராகங்கள் படத்தில் 'கறுப்பு வெள்ளை' திரையில் அறிமுகமாகிய ரஜினியின் முதல் வண்ண திரைப்படம் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய '16 வயதினிலே'.

ரஜினிக்கு முந்தைய தலைமுறை நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர் - சிவாஜி ஆகியோரும் கறுப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்திற்கு 'புரொமோஷன்' பெற்றவர்கள் தான். ஆனால் அவர்கள் செய்யத் தவறிய ஒன்றை ரஜினி செய்திருக்கிறார்.

அதாவது 'கோச்சடையான்' படத்தில் அனிமேஷன் கதாபாத்திரத்திலும், '2.0' திரைப்படத்தில் 3டி திரையிலும் தோன்றியுள்ளார். இப்போதைய நடிகர்களால் கூட இவ்விரண்டையும் செய்ய முடியும். ஆனால் பின்னோக்கி சென்று கறுப்பு வெள்ளையில் அவர்களால் தோன்ற முடியாது. ஆக, கறுப்பு வெள்ளை, வண்ணம், அனிமேஷன், 3டி என நான்கு வெவ்வேறு பரிணாமங்களில் ஜொலிக்கும் உலகின் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்!

Trending News

Latest News

You May Like