இது தெரியுமா ? வெறும் 6 ரூபாய் முதலீட்டில் சூப்பரான திட்டம்..!
குழந்தையின் கல்வி, எதிர்காலம் உள்ளிட்டவற்றை கஷ்டம் இல்லாமல் சமாளிக்க சேவிங்ஸ் செய்ய வேண்டியது அவசியம். அவர்களுக்கு போஸ்ட் ஆபிஸின் பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் சிறப்பான தேர்வாக இருக்கும்.
தபால் அலுவலக சேமிப்பு திட்டமான இதில் ஒரு நாளைக்கு 6 ரூபாய் முதலீடு செய்யலாம். இதன் மூலமாக உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும்.
இந்த திட்டத்தில் குழந்தையின் பெற்றோர் மட்டுமே கணக்கு துவங்க முடியும். அதே நேரம் அந்த பெற்றோருக்கும் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அதற்கு மேற்பட்ட வயது உள்ளவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. குழந்தையின் பெயரில் மட்டும் பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தை துவங்க வேண்டும்.
மேலும், இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குழந்தையின் வயது 5 முதல் 20 வயது வரை மட்டுமே இருக்க வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தில் குடும்பத்தில் உள்ள பல குழந்தைகளை சேர்க்க முடியாது. தங்களின் இரண்டு குழந்தைகளை மட்டுமே இத்திட்டத்தில் சேர்க்க முடியும். மூன்றாவது குழந்தைக்கு பாலிசி எடுக்க முடியாது.
பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ. 6 முதல் ரூ. 18 வரை பிரீமியமாக டெபாசிட் செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு, இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ. 6 சேமித்தால் போதும். முதிர்வு தொகையாக ரூ. 1 லட்சம் வருமானம் கிடைக்கும். மேலும் 20 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் 18 ரூபாய் பிரீமியம் செலுத்தலம். இதன் மூலமாகவும் முதிர்வுக் காலத்தில் ரூ. 1 லட்சம் பணம் கிடைக்கும்.