1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை தராங்களாம்!

1

தி.மு.க அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கபட்டது. மகளிருக்கு வழங்கப்படும் இந்த உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்பொழுது இதற்கான விண்ணப்ப படிவம் அரசு சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி கமிஷ்னர் டாக்டர் ஜே. ராதாக்கிருஷ்ணன் கூறுகையில், தமிழக அரசு வழங்க உள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் நடைபாதையில் வசிப்பவர்கள், ஆதரவற்றோர், இரவு நேர காப்பகங்களில் உள்ள பெண்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு ரேஷன் அட்டையை கிடைக்க ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like