இது தெரியுமா ? தினமும் ரூ. 333 சேமிப்பதன் மூலமாக ரூ. 17 லட்சம் சம்பாதிக்கலாம்..!
தபால் நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் வசதிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் திட்டத்தில் ஒருவர் தினமும் ரூ. 333 சேமிப்பதன் மூலமாக ரூ. 17 லட்சம் வரை வருமானம் பெற முடியும். இந்த RD திட்டத்தை வெறும் ரூ. 100 மட்டும் முதலீடு செய்து கணக்கை துவங்கலாம்.
தற்போது இதற்கு 6.8 சதவீத வருடாந்திர வட்டி கொடுக்கப்படுகிறது. மாத மாதம் சுமார் ரூ. 10,000 இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்காக தினமும் ரூ. 333 சேமித்தால் போதும். அதன்படி ஒருவர் இந்த திட்டத்தில் ஆண்டு முழுவதும் ரூ. 1.20 லட்சம் முதலீடு செய்திருப்பார்.
இதன் மூலமாக 5 ஆண்டுகளில் ஒருவர் இந்தத் திட்டத்தில் ரூ. 5,99,400 தொகையை முதலீடு செய்திருப்பார். இதற்கு ஆண்டுக்கு 6.8 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு மொத்த வட்டி தொகையாக ரூ. 1,15,427 இருக்கும். இதன் மூலமாக 5 ஆண்டுகளில் மெச்சூரிட்டி தொகையாக ரூ.7,14,827-யை முதலீட்டாளர் பெற முடியும்.
இந்த தொகையை எடுக்காமல் மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தைத் தொடரும் போது 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கும். இதனுடன் 6.8 சதவீத வட்டியை கணக்கிடுவதன் மூலம் 10 ஆண்டுகளில் மொத்த முதிர்வு தொகையாக ரூ. 17,08,546 வருமானமாக கிடைக்கும்.