இது தெரியுமா ? ரூ. 47 லட்சம் வரை தரும் சிறப்பான திட்டம்..!
பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்காக பிரத்யேகமாக செயல்பாட்டில் இருந்து வரும் திட்டம் தான் 'சுகன்யா சம்ரிதி யோஜனா'. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் இத்திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். பெண் குழந்தை பெற்றவர்களுக்கான சிறந்த திட்டமாக 'சுகன்யா சம்ரிதி யோஜனா' உள்ளது.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் என அழைக்கப்பட்டு வரும் இது பிரபலமான சிறு சேமிப்புத் திட்டமாக உள்ளது. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பெண் பிள்ளைகளின் பெயரில் SSY கணக்கை திறக்கலாம். இத்திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறப்பதற்கான எ அனுமதி கிடையாது. பெண் பிள்ளைகளுக்கு 10 வயது எட்டும் போது 'சுகன்யா சம்ரிதி யோஜனா' திட்டத்தில் கணக்கை திறக்கலாம்.
செல்வ மகள் திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் நல்ல வட்டியுடன் வரிச்சலுகையும் கிடைக்கும். பெண்ணின் திருமணம் மற்றும் கல்வி செலவுகளுக்கு இத்திட்டம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். தபால் அலுவலகத்திலோ அல்லது வங்கியிலோ செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் SSY கணக்கை துவங்கலாம்.
இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து கணக்கை துவங்கலாம். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம். தற்போது செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.20 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக ஒரு வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
SSY திட்டத்தில் மாத மாதம் ஒருவர் 5,000 ரூபாயை முதலீடு செய்யும் போது, ஒரு வருடத்தில் மொத்தமாக 60,000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கும். 8.2% கூட்டு வட்டி இத்திட்டத்திற்கு வழங்கப்படுவதால், 15 வருடத்தில் ரூ. 9 லட்சம் டெபாசிட்டாக கிடைக்கும். இதற்கான வட்டி 18.92 லட்சம் ரூபாய் என்ற கணக்கில், மொத்தமாக முதிர்வு தொகை ரூ. 27.92 லட்சம் கிடைக்கும்.
மேலும், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஒருவர் வருடா வருடம் ரூ. 1 லட்ச ரூபாய் முதலீடு செய்யும் போது, 15 வருடங்களில் மொத்த முதலீடாக ரூ. 15 லட்சம் இருக்கும். 8.2% விகிதத்தில் இந்த டெபாசிட்டிற்கு 31.53 லட்சம் வட்டி கிடைக்கும். இதன் மூலமாக முதிர்வு தொகை ரூ. 46.53 லட்சம் முதலீட்டாளர்கள் கைக்கு கிடைக்கும்.