இது தெரியுமா ? இந்திய குடிமக்களுக்கு வினாடி வினா போட்டி ஏற்பாடு! ரூ.1 லட்சம் பரிசு!

உலக நாடுகள் பாராட்டும் அளவிற்கு இந்தியாவின் சந்திராயன் 3 வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம்நிலவின் தென்துருவதை ஆய்வு செய்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் சந்திராயன் 3 திட்டத்தை கவுரவிக்க இஸ்ரோவுடன் இணைந்து மைகவ்இந்தியா (MyGovIndia) தளம் மாபெரும் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த போட்டியில் பதிவு செய்து பொதுமக்கள் தங்களுடைய இடத்தில் இருந்தே கலந்து கொள்ளலாம். இதற்கு மைகவ்இந்தியா உருவாக்கியிருக்கும் இணையதளத்திற்குச் சென்று, மொபைல் எண். பெயர் மற்றும் வீட்டு முகவரி போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். இந்த போட்டியில் மொத்தம் 5 நிமிடங்கள், 10 கேள்விகள். 5 நிமிடங்களில் பத்து கேள்விகளுக்கு சரியான விடையளிப்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வினாடி வினா நிகழ்ச்சியில் சந்திரயான் 3 மற்றும் இஸ்ரோவின் நிலவரம் திட்டங்கள் பற்றி இருக்கும். அதே போல போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ. 75000 மற்றும் மூன்றாவது பரிசாக ரூ. 50000 வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் மூன்று இடங்களைத் தவிர்த்து, அடுத்த 100 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.2,000ம், முதல் 100 இடங்களைக் கடந்து அடுத்த 200 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு ரூ.1000ம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.