1. Home
  2. தமிழ்நாடு

இந்த நடைமுறை இருக்கு தெரியுமா ? சுங்கச்சாவடியில் 10 வினாடிகளுக்கு மேல் காத்திருக்க நேரிட்டாலும் பணம் செலுத்த தேவையில்லை..!

1

இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவசர கால சூழ்நிலைகளைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஃபாஸ்டேக் பயன்படுத்த வேண்டும். வங்கிகள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அங்கீகரித்த டீலர்கள், பெட்ரோல் பங்குகள், இ-காமர்ஸ் இணையதளங்கள் மூலம் ஃபாஸ்டேக் வாங்கலாம். ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான இருப்பு இல்லை என்றால் கார்டு பிளாக் செய்யப்படும்.


ஃபாஸ்டேக் வேலை செய்யவில்லை என்றால்: ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இருந்தும் ப்ராசஸ் ஆகவில்லை என்றால் நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சுங்கச்சாவடி நிர்வாகிகளிடம் பேமெண்ட் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் பணம் செலுத்த தேவையில்லை என்று விதிமுறைகள் கூறுகின்றன. ஃபாஸ்டேக் வாலெட்டில் பணம் இருந்தும் சுங்கச்சாவடியில் ஸ்கேனர் வேலை செய்யவில்லை என்றால் கேஷ் கூட செலுத்த தேவையில்லை.


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகளின்படி சுங்கச்சாவடியில் 10 வினாடிகளுக்கு மேல் காத்திருக்க நேரிட்டாலும் பணம் செலுத்த தேவையில்லை என்று விதிமுறைகள் கூறுகின்றன.

ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், சுங்கச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடு வரையப்படும்.
அந்த கோட்டுக்குள் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று விதிமுறைகள் கூறுகின்றன.


சுங்கச்சாவடி நிர்வாகிகள் மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டணமில்லா எண் 1033க்கு கால் செய்து புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
 

Trending News

Latest News

You May Like