இது தெரியுமா ? இனி ATM-க்கு போனாலே PF பணத்தை எடுக்க முடியும்..!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், விரைவில் அறிமுகம் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 3.O, வங்கி அமைப்புக்கு நிகராக இருக்கும் என்று கூறினார்.
ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் வசதி உள்பட பல்வேறு புதிய அம்சங்களுடன் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 3.O முறை, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
வங்கியில் பண பரிமாற்றம் நடைபெறுவதுபோல, பி.எஃப். சந்தாதாரர்கள் தங்களின் யுஏஎன் கணக்கு மூலம் ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுக்கலாம் என்றும், இதற்காக பி.எஃப் அதிகாரிகளிடமோ, வேலைபார்க்கும் நிறுவனத்திடமோ தொழிலாளர்கள் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பி.எஃப்., கணக்கில் உள்ள தொழிலாளர்களின் பணத்தை அவர்கள் விரும்பும்போது எடுத்துக் கொள்ளவும், பணப் பரிமாற்றம், தொழிலாளர்களின் பெயர்களில் திருத்தங்கள், வங்கியிலிருந்து ஓய்வுத் தொகை பெறுவது போன்ற பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
சேவைகள் அதிகரித்துள்ளதால் தற்போது சந்தாதாரர்களிடம் இருந்து வரும் புகார்கள் குறைந்துள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில் பி.எஃப். அமைப்பு மற்றும் செயல்பாடுகள் மாறியிருப்பதாகவும் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.