1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? இனி நீங்கள் அருகிலுள்ள சில்லறை விற்பனைக் கடைக்குச் சென்று கூட பான் கார்டு விண்ணப்பிக்க முடியும்..!

1

பான் கார்டுக்கு விண்ணப்பித்து வாங்கலாம் என்று நினைப்பார்கள். எங்கே விண்ணப்பிப்பது எப்படி வாங்குவது என்று சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். சிலர் ஆன்லைன் மூலமாக தாங்களே விண்ணப்பித்துவிடுவார்கள். ஆன்லைனில் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது நீங்கள் அருகிலுள்ள சில்லறை விற்பனைக் கடைக்குச் சென்று இரண்டு மணி நேரத்திற்குள் உங்கள் டிஜிட்டல் பான் கார்டைப் பெறலாம்.

PayNearby மற்றும் பல சில்லறை விற்பனைக் கடைகள் இப்போது அங்கீகரிக்கப்பட்ட பான் கார்டு சேவை மையங்களாக (PSAs) மாற்றப்பட்டுள்ளன. மளிகைக் கடைகள், மொபைல் ரீசார்ஜ் கடைகள், மெடிக்கல் ஸ்டோர்கள் மற்றும் டிராவல் ஏஜென்சிகள் உள்ளிட்ட இந்தக் கடைகள் இப்போது உங்களுக்கு பான் கார்டு விண்ணப்பிக்க உதவி செய்யும். அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்!

  • ஆதார் கார்டு
 
  • ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்
 
  • வாக்காளர் அடையாள அட்டை
 
  • பயன்பாட்டு பில்கள் (மின்சாரம், நீர், எரிவாயு)
 
  • ஓட்டுநர் உரிமம்


PayNearby ஸ்டோர் தவிர, உள்ளூர் மளிகைக் கடைகள், மொபைல் ரீசார்ஜ் கடைகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற பிற சில்லறை விற்பனைக் கடைகளும் இந்தச் சேவைகளை வழங்குகின்றன.

விண்ணப்பிப்பது எப்படி?

  • புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க அல்லது ஏற்கனவே உள்ள பான் கார்டைப் புதுப்பிக்க விரும்பினால் அதை அந்தக் கடை ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
 
  • OTP சரிபார்ப்புக்கு உங்கள் மொபைல் எண்ணை வழங்க வேண்டும்.
 
  • உங்களிடம் ஏற்கனவே பான் கார்டு இருக்கிறதா என்று சரிபார்க்கவும்.
 
  • பெயர், ஆதார் எண் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
 
  • ஆதார் விவரங்களை பயன்படுத்தி eKYC அல்லது ஸ்கேன் அடிப்படையிலான சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.
 
  • உங்கள் தேவைக்கேற்ப பிளாஸ்டிக் பான் கார்டு (ரூ. 107) அல்லது ePAN கார்டு (ரூ. 72) என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.
 
  • தேவையான பணத்தை செலுத்த வேண்டும்.
 
  • அடுத்து eKYC அங்கீகாரத்தை முடிக்க வேண்டும்.
 
  • ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிட்டு OTP மூலம் சரிபார்க்க வேண்டும்.
 
  • கடைசியாக உங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்க வேண்டும்.
 
  • ஏதேனும் சிக்கல் காரணமாக ஒப்புகை எண் உருவாக்கப்படவில்லை என்றால், பணத்தைத் திரும்பப்பெற்றுக் கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like