1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? வாய்ப்புண் பிரச்சனையா ? ஈசியாக குணமாக்கும் கோவைக்காய் தீநீர்..!

1

கோவை இலை, கோவை பூ மற்றும் கோவைக்காய் அனைத்தையும் சமஅளவு எடுத்து ஒன்றாக ஓரு ஒருபாத்திரத்தில் போட்டு அதில் தேவையான நீரை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவைக்க வேண்டும், கொதித்த பின் அதை வடிகட்டியால் வடிகட்டி நீரைமட்டும் தனியாக எடுத்து சேகரித்து கொள்ளுங்கள். சுவைக்காக சிறிது தேனை சேர்த்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது வாய்ப்புண் டானிக் தயார். இதை சித்த வைத்தியத்தில் தீநீர் இறக்குவது என்று கூறுவார்கள். இந்த தீநீர் வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக சிறந்த டானிக்காகும். சில நேரங்களில் மற்ற நோயின் காரணமாக மருந்துகளை சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது வேறு சில காரணங்களால் நம் வாய் வெந்துபோய்விடும், அந்த சமயங்களிலும் இதை பயன்படுத்தலாம்.

கோவைக்காய் வெறும் பச்சையாகவே சாப்பிட்டாலே போதும் வாய்ப்புண் விரைவில் குணமடையும். கோவைக்காயை பச்சையாக சாப்பிட்டால் அசல் வெள்ளரி பிஞ்சை சாப்பிட்ட சுவை இருக்கும்.

கோவைக்காய் பித்தம், இரத்தப் பெருக்கு, வாய்வு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றிற்கு எல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும்.
 

முக்கியமாக கோவக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கிறது.

கோவை இலைச்சாறு, கருஞ்சீரகம் பொடி ஐந்து கிராம் சேர்த்து அரைத்து படை மீது பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும். தொடர்ந்து பூசிவர படை குணமாகும். கோவை இலை கசாயம் குடித்து வர சொறி, சிரங்கு தீரும்.

கோவை இலையை கசாயம் செய்து குடித்து வருவதன் மூலமாக உடல் வெப்பம் சமநிலையில் இருக்கும்.கண்கள் குளிர்ச்சி பெறும். கோவை இலை கசாயம் குடித்துவர கண் எரிச்சல் தீரும்.

Trending News

Latest News

You May Like