1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? உங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க வெறும் 2 நிமிடம் போதும்..!

1

தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 12% வரைக்கும் PF பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையை ஊழியர்கள் அவசர தேவைக்காக பகுதியளவு பெற்றுக்கொள்ள இயலும். தற்போது எந்தெந்த காரணங்களுக்காக பிஎஃப் தொகையை திரும்ப பெறலாம் என்பது குறித்த அறிவிப்பை காணலாம்.

EPF சந்தாதாரர் எதிர்பாராத சூழ்நிலைகளால் தங்களது வேலையை இழந்துவிட்டால் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 75% மட்டுமே திரும்ப பெற முடியும். இரண்டு மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் மீதமுள்ள 25% தொகையை திரும்ப பெறலாம்.

PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க என்ன தேவை?

1. UAN எண்

2. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்

3. ஆதார் எண்

4. ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு

5. பிஎஃப் பணத்தை எடுப்பதற்காக ஆவணங்கள்

 பிளாட் அல்லது வீடு வாங்கும் போது பிஎஃப் பணத்தை எடுக்க விரும்பினால் மாத சம்பளத்தில் 24 மடங்கு மற்றும் வீடு வாங்க அல்லது கட்டுவதற்கு 36 மடங்கு வரையிலும் எடுக்கலாம் என EPFO அறிவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக EPFO கணக்கில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.அடுத்ததாக 3 ஆண்டுகளாக 10 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் இபிஎப் வீட்டு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் போது மொத்த தொகையிலிருந்து 90 சதவீதம் வரையில் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால், உங்களது பிஎஃப் பணம் ரூ. 20,000க்கும் குறைவாக இருந்தால் இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. அதே நேரத்தில் 15 நாட்களுக்கும் மேல் ஊழியர்கள் வேலையில்லாமல் இருந்தால் EPFO டெபாசிட் செய்யப்பட்டுள்ள முழுத் தொகையையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். EPFOல் ஏழு ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தால் திருமணம் மற்றும் படிப்புக்காக 50% வரையிலும் வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

PF கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி?

1. முதலில் EPFO e-SEWA போர்டலில் லாக் இன் செய்ய வேண்டும்

2. பின்னர் பணத்தை பெறுவதற்காக கிளைம் செக்சனுக்கு செல்ல வேண்டும்.

3. அங்கு வங்கி கணக்கு விவரங்களை பதிவிட வேண்டும்.

4. அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை கிளிக் செய்ய வேண்டும்.

5. பின்னர் பணம் எடுப்பதற்கான காரணத்தை பதிவிட வேண்டும்.

6. மேலும் அதில் கேட்கப்படும் விவரங்களை மற்றும் ஆவனங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

7. பின்னர் ஒடிபியை பதிவிட்டு சமர்பிக்கவும்.இதற்கு பிறகு பிஎஃப் பணம் உங்கள் வங்கி கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

Trending News

Latest News

You May Like