இது தெரியுமா ? தினமும் ரூ.200 ஒதுக்கினாலே போதும்... நீங்களும் லட்சாதிபதிதான்.. !
நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்களுடைய சேமிப்பு பழக்கத்தை அதிகரித்து கொள்ளவும், தனி நபர்களிடையே ஆரோக்கியமான முதலீட்டு பழக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதுதான், கிசான் விகாஸ் பத்ரா திட்டம்..
மத்திய அரசின் அஞ்சல் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் கேவிபி எனப்படும் கிசான் விகாஸ் பத்ரா திட்டமானது, சிறுசேமிப்பு திட்டங்களிலேயே வாடிக்கையாளர்களின் அதிக ஆதரவை பெற்றதாகும்.இந்த திட்டத்தின் முக்கிய அம்சமே, இதன் அதிக வட்டி விகிதம்தான். இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளருக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருவதே,
இந்த திட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சமாக ரூபாய் 1000 போதும். அதிகபட்சமாக விருப்பப்பட்ட தொகையை நீங்கள் இந்த திட்டத்தில் சேமிக்க முடியும். 10 வருடங்களில், இரட்டிப்பு லாபத்துடன், முதலீடு செய்த தொகையை நீங்கள் பெறலாம்.
அதாவது ஒரு வருடத்திற்கு தொடர்ந்து தினமும் ரூ.200 முதலீடு செய்தால், 10 வருடத்துக்குள் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும்.. ஒரு வருடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.200 முதலீடு செய்தால், அந்த ஆண்டுக்கான மொத்த முதலீடு ரூ.73,000 (200 * 365) ஆகும். இரட்டிப்பு காலம் 115 மாதங்களில், வருடாந்திர வட்டி விகிதத்துடன் உங்கள் முதலீடு, 9 ஆண்டுகள், 7 மாதங்களில் ரூ.1,46,000 ஆக இரட்டிப்பாகும்.நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அடுத்த 115 மாதங்களில் இது ரூ.2 லட்சமாக கிடைக்கும். அதுவே நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தால், இரட்டிப்பு தொகையாக ரூ.20 லட்சம் கிடைக்கும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நீங்க இணைய வேண்டுமானால், அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு நேரில் அணுகி இணையலாம்.. ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ, கேவிபி விண்ணப்பப் படிவம் போன்றவை கட்டாயம் தேவைப்படும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். வயது வரம்பு எதுவுமே கிடையாது. ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவர் பெயருக்கு (நிபந்தனைக்குட்பட்டு), எத்தனை முறை வேண்டுமானாலும் கணக்கை மாற்றிக்கொள்ளவும் முடியும்..
இத்திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் கிசான் விகாஸ் பத்திரத்தை பாதிக்காது. இந்த திட்டத்திற்கு அரசு உத்தரவாதம் உள்ளது. ஆகையால் இதில் முதலீடு செய்த தொகைக்கு ரிட்டர்ன் கிடைக்குமா என நீங்கள் பயப்பட வேண்டாம். இந்தியாவில் உள்ள எந்தவொரு தபால் நிலையத்திலும் கிசான் விகாஸ் பத்திர திட்டத்தை தொடங்கலாம்.கிசான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்த தொகை 115 மாதங்களில் முதிர்வடையும் என்றாலும் நீங்கள் பணத்தை திரும்ப எடுக்கும் வரை வட்டித் தொகை கிடைக்கும். கிசான் விகாஸ் பத்திர திட்டத்தின் மூலமாக கடன் வசதியும் கிடைக்கிறது.