இது தெரியுமா ? ஒட்டகத்திற்கு உயிருள்ள பாம்பை உணவாக கொடுக்கும் வழக்கம் உல்ளது..!
உலகில் வாழும் பல உயிரினங்களுக்கும், வாழ்வதற்கு ஏற்ற உடலமைப்பை இயற்கையே கொடுத்திருக்கிறது. அதில் ஒட்டகமும் ஒன்று. ஒட்டகத்தின் முதுகுப் பகுதியில் திமில் போன்ற மேட்டுப் பகுதியைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த இடத்தில் கொழுப்பு உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.
ஒட்டகத்தின் இரைப்பையில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளின் சுவர்களில் தனித்தன்மை வாய்ந்த நீர்ச் செல்கள் உள்ளன. இதில்தான் ஒட்டகம் நீரைச் சேமித்து வைக்கிறது. இதோடு, ஒட்டகத்தின் தசைகளிலும் இணைப்புத் திசுக்களிலும் நீர் சேமித்து வைக்கும் அமைப்பு உள்ளது. திமிலில் சேமிக்கப்படும் கொழுப்பு உணவுப் பொருட்களின் மூலம் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இந்த வளர்சிதை மாற்றம் மூலம் ஒட்டகத்துக்குத் தானாகவே நீர் கிடைத்துவிடும்.
இதை வைத்தே சில வாரங்கள் வரை நீர் அருந்தாமல் ஒட்டகத்தால் தாக்குப்பிடிக்க முடியும். இப்படி மீண்டும் மீண்டும் நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளவும் ஒட்டகத்தால் முடியும்.
ஒட்டகங்களின் ஆயுட்காலம் 30 முதல் 50 ஆண்டுகள். ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்களை அவற்றின் பால், இறைச்சிக்காகவும், சுமைகளை ஏற்றிச் செல்லவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஒட்டகத்தின் உடல் 34 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை தாங்கக்கூடியது. மனிதர்களின் உடல் 23 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டகம் ஏறத்தாழ 200 கிலோ எடையை சுமந்து கொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்க கூடியது.ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையுடனும் இருக்கும். அதன் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் இவை உயிர் வாழும்.
இந்நிலையில் ஒட்டகங்களுக்கு சில நேரங்களில் உயிருள்ள பாம்புகளை உணவாகக் கொடுக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா ?
பாம்புகளை உட்கொள்வது ஒட்டகங்களின் சில நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்று கருதப்படுகிறது.இந்த விசித்திரமான பாரம்பரியத்தின் முக்கிய காரணத்தை ஹயாம் அல்லது ரத்தக்கசிவு நோய் என்று அழைக்கப்படும் ஒரு நோய் விளக்குகிறது, இது ஒட்டகங்களின் சிறப்பியல்பாகும். உயிருள்ள பாம்பை உட்கொள்வது இந்த நோய் மற்றும் அதன் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்று சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. பாம்பிலிருந்து வரும் விஷம் ஒட்டகத்திற்கு ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது, இது நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது என்று நம்பப்படுகிறது.
இந்த நடத்தை ஒரு சுகாதார மருந்து அல்ல, ஆனால் இது கலாச்சாரம் சார்ந்த ஒன்றாகும். சில மரபுகளில் ஒட்டகங்கள் புனிதமான விலங்குகள், மேலும் அவை பாலைவனத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையின் மையமாகவும் கருதப்படுகின்றன. எனவே அவற்றை காப்பாற்ற மக்கள் இதனை ஒரு சடங்காக செய்கிறார்கள்.