1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? தோல் நோய்களைக் குணமாக்கும் தன்மை இதற்கு உண்டு..!

1

குப்பைமேனிதோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், சாலை ஓரங்களிலும், சாதாரணமாக வளரக்கூடிய களைச் செடி இது மற்ற இடங்கலுக்கும் பரவக்கூடியது.

குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன. குப்பைமேனி இலையைத் தண்ணிரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும்.

தோல் நோய்கள் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அறைத்து அதன் சறை எடுத்துத் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் நீண்ட காலமாக உள்ள தோல் நோய்கள் குணமாகும். அல்லது குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, சுமார் 3 மணி நேரம் ஊறவைத்து, கழுவி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.

குப்பைமேனி செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நசுக்கி 1 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடித்தால் சளி இருமல் இருக்காது.

முக ஆரோக்கியத்திற்கு பெண்கள் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவிவர, முகத்தில் உள்ள பருக்கள், புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக இருக்கும்.

10 குப்பைமேனி இலைகளைச் சுத்தம் செய்து பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர அழகும், ஆரோக்கியமும் இருக்கும்.

Trending News

Latest News

You May Like