1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்... எப்படி விண்ணப்பிப்பது..?

1

மூன்று கோடி பெண்களை செல்வந்தர்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது 'லக்பதி திதி யோஜனா'. மகளிருக்கான நிதி உதவியை மேம்படுத்தும் வகையில் 'லக்பதி திதி யோஜனா' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு. இதன் கீழ் வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.மகளிர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களை சுயதொழில் செய்ய வைக்கிறது இந்த திட்டம். இதன் மூலமாக அவர்களின் பொருளாதார நிலையும் மேம்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி 'லக்பதி திதி யோஜனா' திட்டம் ஒன்றிய அரசால் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதனால் வட்டி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. கடன் பெறும் பெண்கள் அசல் தொகையை மட்டும் திருப்பி செலுத்தினால் போதும்.

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் மூலம் ப்ளான் பெறுவதற்கு சில வரைமுறைகள் உண்டு. இதற்கு முதலில் சுய உதவிக் குழுவில் (SHG) பெண்கள் சேர்ந்திருக்க வேண்டும். இந்த குழுக்கள் கடன் பெறும் செயல் முறைகளை எளிதாக்கி தரும். SHG களின் உதவியுடன் லக்பதி திதி யோஜனா திட்டத்தின் பலனை பெற முடியும். தேவையான ஆவணங்கள் மற்றும் தொழில் துவங்குவதற்கான திட்டங்களுடன் SHG அலுவலகத்திற்குச் சென்று லக்பதி திதி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

லக்பதி திதி யோஜனா பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை நோக்கங்களை கொண்டுள்ளது. 18 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

லக்பதி திதி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, பான் கார்டு, வருமானச் சான்று, வங்கி பாஸ்புக், மொபைல் நம்பர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் தேவை. இந்த திட்டத்திற்கு லக்பதி யோஜனா இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைனில் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு தேவையான ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்கலாம்.

Trending News

Latest News

You May Like