1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? ஆசியாவிலேயே பணக்கார கிராமம் இந்தியாவில் தான் உள்ளது..!

1

காசு, சொத்து இருந்தால் தான், அக்கம் பக்கத்தினர் என்ன, சொந்த பந்தங்களே மதிப்பர் என்ற நிலை இப்போது உருவாகி வருகிறது. அப்படிப்பட்ட நிலையில், ஒரு ஊரே மொத்தமும் பணக்காரர்களாக இருந்தால் எப்படி இருக்கும்? உண்மையில் அப்படி ஒரு கிராமம் இருக்கிறது; அதுவும் நம் நாட்டில் இருக்கிறது. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள புஜின் அருகேயுள்ள மாதாபர் கிராமம் தான் அந்த பெருமைக்குரிய கிராமம்.

* இங்கு வசிக்கும் 32 ஆயிரம் பேர், வங்கியில் டிபாசிட் செய்துள்ள தொகை 7 ஆயிரம் கோடி ரூபாய். மொத்தம் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. உள்ளூரை சேர்ந்த 1200 குடும்பங்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஒவ்வொரு தனி நபருக்கும் சராசரியாக டிபாசிட் ரூ.15 லட்சம் இருக்கிறது.

* கிராமத்தில் SBI, PNB, HDFC வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட 17 வங்கி கிளைகள் உள்ளன.

* கிராமத்தில் சுகாதாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளும் உள்ளன. வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் பணக்கார கிராமம் என கருதப்படுகிறது.

* விவசாயம் தான் மாதாபார் கிராமத்தில் தொழில். இங்கு விளையும் பொருட்கள் மும்பைக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

* கிராமத்தில் வசிப்பவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.

வெளிநாட்டிலும் வசித்தாலும், தங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் உள்ள இந்த கிராமத்து வங்கிகளில் தான் டெபாசிட் செய்கின்றனர். இது தான் இந்த கிராமத்தின் அசுர வளர்ச்சிக்கு காரணம் என்கிறது சமீபத்தில் இங்கு நடத்தப்பட்ட ஆய்வு.

Trending News

Latest News

You May Like