இது தெரியுமா ? பெண்கள் பெயரில் கடன் வாங்கினால் 1 லட்சம் சேமிக்கலாம்..!
பெண்கள் பெயரில் வீட்டுக் கடன் வாங்கினால் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பது குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
வீட்டு கடன்களை பொறுத்தவரை பெண்களின் பெயரில் வாங்கும் போது வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட அளவிலான சலுகை கிடைக்கிறது.கடன் வழங்கும் நிறுவனங்கள் 0.05% முதல் 0.10% வரை வட்டி விகிதத்தை குறைக்கின்றன.இந்த சதவிகிதம் குறைவாக தெரிந்தாலும் நீண்ட கால அடிப்படையில் கணக்கிட்டு பார்க்கும்போது ஒரு கணிசமான தொகையை இதன் மூலம் சேமிக்க முடியும்.
உதாரணமாக ரூ.1 கோடிக்கு வீட்டுக்கடன் 20 ஆண்டு காலத்திற்கு வாங்குகிறோம் எனில், ஒரு ஆண் பெயரில் வீட்டு கடன் வாங்கும் போது அவர்களுக்கான வட்டி 8.9% ஆக இருக்கும் இதுவே ஒரு பெண்ணின் பெயரில் வாங்கும் போது அது 8.8% என குறைகிறது. இதனால் வட்டியில் ரூ.1 லட்சம் சேமிக்க முடியும். அது மட்டுமின்றி வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 பி -இன் கீழ் பெண்களின் பெயர்களில் வீடு வாங்கும் போது அதற்காக அவர்கள் செலுத்தும் வட்டிக்கு ஒரு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.
வீட்டு கடனுக்கான பிரின்சிபல் தொகையை திரும்ப செலுத்தும் போது வருமான வரி சட்டத்தின் பிரிவு 80cஇன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். கணவன் மனைவி இருவரும் கூட்டாக சேர்ந்து வீட்டுக் கடன்களை பெறும்போது அவர்கள் தனித்தனியாக இத்தகைய வரி சலுகைகளை அனுபவிக்க முடியும்.