இது தெரியுமா ? மாதம் தோறும் 376 ரூபாய் கட்டினால் ரூ.8.5 லட்சம் அள்ளலாம்..!
ஓய்வூதியதாரர்களுக்காகவே கொண்டுவந்துள்ள திட்டம்தான், அடல் பென்ஷன் யோஜனா திட்டமாகும்.. இதுவரை 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளார்கள். இந்த திட்டமானது, வயதானவர்களுக்கு, பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய உத்தரவாதமான திட்டமாகும். வயதான காலத்தில் மாதந்தோறும் நல்ல வருமானமும் தரக்கூடியது..
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செலுத்தி வந்தால் 60 வயது முதல் குறிப்பிட்ட தொகை மாத ஓய்வூதியமாகக் கிடைக்கும். 25 வயதில் சேர்ந்தால் மாதம் தோறும் 376 ரூபாய் 35 ஆண்டுகள் செலுத்த வேண்டும்..
30 வயதில் சேர்ந்தால் மாதந்தோறும் 577 ரூபாய் 30 ஆண்டுகள் செலுத்த வேண்டும்.. 35 வயதில் சேர்ந்தால் மாதம் தோறும் 902 ரூபாய் 25 வருடங்கள் செலுத்த வேண்டும்.. 40 வயதில் சேர்ந்தால் மாதந்தோறும் 1454 ரூபாய் 20 வருடங்கள் செலுத்த வேண்டும்.. பாலிசிதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணைக்கு மாத ஓய்வூதியமாக 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் அல்லது பாலிசிதாரரின் வாரிசுக்கு 8.5 லட்சம் கிடைக்கும்.
18 வயது முதல் 40 வயதுடைய எந்த ஒரு நபரும் ஒரு அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு மூலம் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்