இது தெரியுமா ? பொய் சொன்னால் உடலின் இந்த பாகம் சூடு பிடிக்குமாம்..!
இன்றைய வேகமான வாழ்க்கையில் சிதறிக் கிடக்கும் பல அறியப்படாத தகவல்கள் நமது பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. ஆனால் அகுறித்து நம்மில் பலருக்கு தெரியாது. அதுகுறித்த அறிவியல் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்வோம்.
உடலின் எந்தப் பகுதியில் ரத்தம் இல்லை?. ரத்த நாளங்களால் நேரடியாக செல்ல முடியாத ஒரே உயிரணு கண்ணின் கார்னியா என்று விஞ்ஞானம் கூறுகிறது. கார்னியாவை தவிர, ரத்த நாளங்கள் இல்லாத உடலின் மற்ற பாகங்களில் முடி, நகங்கள், பல் மற்றும் வெளிப்புற தோல் அடுக்கு ஆகியவையும் அடங்கும்.
மனித உடலின் மிக நீளமான பகுதி எது?: மனித உடலில் மிக நீளமான எலும்பு தொடை எலும்பு. இது கீழ் மூட்டுக்கு அருகில் உள்ள எலும்பு ஆகும். மறுபுறம், சர்டோரியஸ்(Sartorius) என்பது மனித உடலில் தொடையின் முன் பகுதியில் இருக்கும் மிக நீளமான தசை ஆகும்.
மனித உடலின் ரத்தத்தை சுத்திகரிக்கும் உறுப்பு எது?: மனித உடலில் ரத்த சுத்திகரிப்புக்கு உதவும் முக்கிய உறுப்பு சிறுநீரகம். சிறுநீரகங்கள் ரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்களை வடிகட்டுகின்றன.
பொய் சொல்லும்போது உடலின் எந்தப் பகுதி வெப்பமடைகிறது என்று சயின்ஸ் டெய்லி(Science Daily) இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஒருவர் பொய் சொல்லும்போது, அவருக்கு பினோச்சியோ விளைவு (Pinocchio effect) ஏற்படுகிறது. அதன்படி, இந்த Pinocchio effect மூக்கைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதை தசைகள் மற்றும் கண்களின் உள் மூலைகளில் வெப்ப நிலையை அதிகரிக்கிறது.பொய் சொல்லும்போது, மூக்கைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதை தசைகளிலும், கண்களின் உள் மூலைகளிலும் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுகிறது என்று அறிவியல் கூறுகிறது. கடினமான mental task செய்யும் நபர்களின் முக வெப்பநிலை குறைவதையும், அதிக பதட்டத்தை அனுபவிக்கும் நபர்களின் முக வெப்பநிலை அதிகரிப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விளக்கத்தின்படி, நீங்கள் பொய் சொல்கிறீர்களா என்று உங்கள் மூக்கால் கண்டுபிடிக்க முடியும். ஸ்பெயினில் உள்ள கிரனாடா பல்கலைக்கழகத்தின் (University of Granada) உளவியல் ஆராய்ச்சியாளர்கள் தெர்மோகிராஃபியைப் பயன்படுத்தி மக்களின் முகங்களின் வெப்ப நிலையை சோதனை செய்தனர்.பொய் சொல்லுபவர்களுக்கு மூக்கை சுற்றியுள்ள சுற்றுப்பாதை தசைகள் மற்றும் கண்களின் உள் மூலைகளில் வெப்ப நிலையில் பெரியளவில் மாற்றம் ஏற்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
உடலில் உள்ள எலும்புகள் எப்போதும் எரிவதில்லை. எலும்பை எரிக்க, 1,292 டிகிரி பாரன்ஹீட் அதிக வெப்ப நிலை தேவைப்படுகிறது. ஆனால் இந்த வெப்ப நிலையில், எலும்பு உருவாகும் கால்சியம் பாஸ்பேட் முற்றிலும் எரியாது.
குளிர்காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உறைந்திருந்தாலும், அதன் கீழ்பகுதி உறையாமல் இருப்பது ஏன்?
குளிர்காலங்களில் குளிரால் ஏரியின் மேற்பரப்பு உறைந்து பனிக்கட்டியாக மாறுகிறது. பனிக்கட்டி நீரைக் காட்டிலும் அடர்த்தி குறைவாக இருப்பதால் நீரின் மேல் மிதக்கிறது. இது பாதுகாப்பு உறை போல் நீரின் மேற்பரப்பில் மூடியிருப்பதால் மேலே உள்ள குளிர்ச்சி கீழே உள்ள நீரை அடைவதில்லை. அது பனிக்கட்டியாக உறைவதும் இல்லை.
கோடைக்காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களை திறக்கும் பொழுது அவை வெடிப்பது ஏன்?
சோடா பாட்டில்களில் கார்பன்-டை-ஆக்சைடு அதிக அழுத்தத்தில் அடைக்கப்பட்டிருக்கும் கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக இந்த வாயு விரிவடைகிறது. இதன் அழுத்தமும் அதிகரிக்கிறது. அழுத்தம் இவ்வாறு அதிகரிப்பதால் பாட்டில்களை திறக்கும் பொழுது அழுத்தத்துடன் வெளியேறும் வாயு பாட்டில்கள் உடைய காரணமாகிறது.
ஒரு தாவரத்தின் இலையை எடுத்து கசக்கினால் சாறுடன் நுரை வருவது ஏன்?
தாவரங்களிலும் சுவாசித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. குறிப்பாக இலையின் கீழ்புறத்தில் சுவாசத் துளைகள் காணப்படும். இத்துளைகளின் வழியாக வெளிப்புறக் காற்று இலைக்குள் செல்லும். ஸ்பன்ஜின் பாரன்கைமா என்ற செல்கள் அதிக செல் இடைவெளி விட்டு காணப்படும். இந்தச் செல் இடைவெளிக்குள் சுவாசத் துளை வழியாக காற்று வந்து நிரப்பப்பட்டிருக்கும். இலையை எடுத்துக் கசக்கும்போது, செல் இடைவெளியிலுள்ள காற்று இலைச் சாற்றுடன் நுரைத்து வருகின்றது.