1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? இதை ஒரு உருண்டை சாப்பிட்டாவே கண் பார்வை சிறப்பா இருக்குமாம்..!

1

வேப்பம் பூ கொண்டு வேப்பம் பூ ரசம், வேப்பம் பூ பச்சடி, வேப்பம் பூ பொடி என விதவிதமாக தயாரித்து சாப்பிடலாம். வேப்பம் பூ பொடியாக்கி வைத்து வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.

வேப்பம் பூ கொண்டு தயாரிக்கப்படும் வேப்பம் பூ சாதம் பற்றி இப்போது பார்க்கலாம்.

  • ​செரிமானத்தை சீராக்கி குடல் இயக்கத்தை மேம்படுத்தும். இதனால் மலச்சிக்கல் இருக்காது.
  • எடை இழப்புக்கு வேப்பம் பூ உதவும்.
  • இரத்தத்தை சுத்திகரித்து உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகின்றன.
  • இதன் கசப்பு தன்மை குடல் பூச்சிகளை வெளியேற்ற செய்கிறது.
  • கண் பார்வையை மேம்படுத்துகிறது
  • இரத்த சர்க்கரை அளவை சமன்படுத்துகிறது
  • வேப்பம் பூ வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும்.

தேவை

  • உதிரான சாதம் - 1 கப்
  • வேப்பம் பூ - கால் கப்
  • எண்ணெய் அல்லது நெய் - 4 டீஸ்பூன்
  • சாம்பார் வெங்காயம் பொடியாக நறுக்கியது - கால் கப்
  • சீரகம் பொடித்தது - 1 டீஸ்பூன்
  • மிளகு - 1 டீஸ்பூன் (காரத்துக்கேற்ப)
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - தாளிக்க
  • கடுகு, உ.பருப்பு, வர மிளகாய் - தேவைக்கு
  • உப்பு - ருசிக்கேற்ப

    செய்முறை
  • வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டும்.
  • பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு வேப்பம் பூ சேர்க்கவும்.
  • இவை நன்றாக வதங்கும் போது மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  • பிறகு உதிரான சாதம் சேர்த்து கலந்து உப்பு சேர்த்து இறக்கவும்.
  • சுவையான வேப்பம் பூ சாதம் தயார்.

Trending News

Latest News

You May Like