1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? இந்த நேரத்தில் தங்க நகை வாங்கினால் பன்மடங்காக பெருகும்..!

1

குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே! சனிபகவானின் மைந்தனாகிய குளிகன் இந்நேரத்திற்கு ஆதிக்கம் செலுத்துபவனாக இருக்கிறான். அதனால் தான் குளிகை என்ற பெயர் வந்தது. இந்த நேரத்தில் நீங்கள் எதை செய்தாலும் அது திரும்பத் திரும்ப பன்மடங்காக வளரும் என்பது ஐதீகமாக உள்ளது. எந்த ஒரு செயல் திரும்பத் திரும்ப நடைபெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ! அந்த செயலை குளிகை நேரத்தில் நீங்கள் துவங்கினால் நினைத்தது வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


எந்த செயல் திரும்ப திரும்ப நடைபெறக் கூடாது என்று இருக்கிறதோ! அந்த செயலை குளிகை நேரத்தில் கட்டாயம் செய்யவே கூடாது. இதனால் தான் திருமணங்கள் குளிகை நேரத்தில் செய்யப்படுவதில்லை. குளிகையில் திருமணம் செய்தால் அந்த மணவாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. விவாகரத்து நேரும்.

மீண்டும் திருமணம் செய்யும் நிலை வரலாம். இதனால் அந்த நேரத்தில் திருமணம் தவிர்க்கப்படுகின்றன. இந்த நேரத்தில் தங்க நகையை அடமானம் வைப்பது, கடன் வாங்குவது, இறந்தவர்களின் உடலை எடுப்பது போன்ற காரியங்களை செய்யக்கூடாது. அப்படி செய்தால் அந்த விஷயங்கள் அனைத்தும் திரும்ப திரும்ப நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் கடனை திரும்ப கொடுக்கலாம். நாம் திரும்ப கொடுக்கும் கடன் உங்களுக்கு பணவரவு அதிகம் உண்டாகி கடனை திரும்ப கொடுத்து அந்த கடன் முழுவதும் அடைபடும்படி செய்து விடும். அந்த அளவிற்கு குளிகை நேரம் அதிர்ஷ்டகரமான நேரமாகும்.

குளிகையில் சேமிக்கப்படும் பணம் ஆனது பன்மடங்காகப் பெருகும் ஆற்றலுடையது. பணத்தை ஈர்க்கும் சக்தி சிகப்பு நிறத்திற்கு உண்டு. நீங்கள் குளிகை நேரத்தில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் சிகப்பு பட்டு துணியை விரித்து அதில் பணத்தை போட்டு வைக்கவும். யாரும் அடிக்கடி பார்க்காத இடத்தில் இந்த கண்ணாடி கிண்ணத்தை வைத்துவிட்டு அதில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை தினமும் சேமித்து வரலாம். குளிகை நேரத்தில் சேமித்து கொண்டே வரும் பணத்தை தினசரி செலவிற்கு எடுக்கக் கூடாது. நீங்கள் சேமித்த இந்த பணத்தை கொண்டு நல்ல விஷயங்கள் செய்யலாம். வீடு கட்ட, தொழில் துவங்க, நிலம் வாங்க இந்த பணத்தை பயன்படுத்தினால் காரியத் தடையின்றி நடைபெறும்.


ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் எப்படி நல்ல விஷயங்களை தவிர்க்கிறோமோ! அதேபோல் குளிகை நேரத்தில் நல்ல காரியங்கள் செய்யப்படமாட்டாது. இந்த நேரத்தில் தங்க நகை வாங்கலாம். இந்த நேரத்தில் வாங்கப்படும் தங்க நகையானது பன்மடங்காக உங்கள் வீட்டில் பெருகும் என்பது ஐதீகம். குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் தானே பிரச்சனை? திரும்ப கொடுக்கலாம் அல்லவா? அவ்வாறு கொடுத்தால் உங்களுக்கு பணவரவு அதிகம் உண்டாகி கடனை திரும்ப கொடுத்து அந்த கடன் முழுவதும் அடைபடும்படி செய்து விடும். இப்போது கூறுங்கள் குளிகை அதிர்ஷ்டமான நேரம் தானே?


 

Trending News

Latest News

You May Like