1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? வாட்ஸ்அப்பில் ஷார்ட் வீடியோ மெசேஜை எப்படி அனுப்புவது..!

1

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலான அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள், இப்போதெல்லாம் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன. தகவல் தொடர்பின் ராஜாவாக வாட்ஸ்அப் மாற்றியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் தற்போது வாட்ஸ்அப்பில் ஷார்ட் வீடியோ மெசேஜ்  என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறுகிய வீடியோக்களை உடனடி மெசேஜ்களாக அனுப்ப உதவும் ஒரு அம்சமாகும். முன்னதாக வாட்ஸ்அப்-ல் ஆடியோ அல்லது டெக்ஸ்ட் மெசேஜ்களை மட்டுமே ரிப்ளையாக அனுப்ப முடிந்தது. ஆனால் இனிமேல் குறுகிய வீடியோக்களை பதிவுசெய்து, அதை டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கான ரிப்ளையாக அனுப்ப முடியும்.

whatsapp

இந்த புதிய அம்சத்தின் கீழ் 60 வினாடிகள் வரை நீளும் ரியல் டைம் வீடியோ மெசேஜை ரிப்ளையாக அனுப்ப முடியும். வாட்ஸ்அப்பின் கீழ் உள்ள மற்ற மெசேஜ்களை போலவே ஷார்ட் வீடியோ மெசேஜும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜ்களாக இருக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறுகிறது. அதாவது நீங்கள் யாருக்கு ஒரு ஷார்ட் வீடியோ மெசேஜை அனுப்புகிறீர்களோ, அவரை தவிர்த்து வேறு யாராலும் அதை பார்க்க முடியாது என்று அர்த்தம்.

ஷார்ட் வீடியோ மெசேஜ் அம்சத்தின் ரோல் அவுட் ஏற்கனவே தொடங்கி விட்டது. இது கூடிய விரைவில் உலகளவில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் ஷார்ட் வீடியோ மெசேஜை எப்படி அனுப்புவது?

ஷார்ட் வீடியோ மெசேஜ் அனுப்புவது வாய்ஸ் மெசேஜை அனுப்புவதை போலவே மிகவும் எளிமையாக இருக்கும். வீடியோ மோட்-க்கு மாறி, அதை லாங் பிரஸ் அல்லது ஹோல்ட் செய்வதன் மூலம் உங்களால் ஒரு ஷார்ட் வீடியோவை பதிவுசெய்ய முடியும். பின்னர் அதை ரிப்ளையாக அனுப்பலாம். அவ்வளவு தான்!

Whatsapp

வீடியோ ரெக்கார்டிங் செய்யும் போது மேல் நோக்கி ஸ்வைப்  செய்வதன் மூலம் நீங்கள் ரெக்கார்ட் செய்யும் வீடியோவை லாக் செய்வதற்கான விருப்பமும் உங்களுக்கு கிடைக்கும். அதாவது வாய்ஸ் ரெக்கார்டிங் மெசேஜில் கிடைப்பது போலவே ஷார்ட் வீடியோ மெசேஜ் அம்சத்திலும் லாக் அம்சம் இருக்கிறது. இது லாங் பிரஸ் அல்லது ஹோல்ட் செய்யும் வேலையை குறைக்கும் ஒரு வசதி.

ஷார்ட் வீடியோ மெசேஜில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு வசதியும் உள்ளது. அது என்னவென்றால், நீங்கள் ஒருவருக்கு ஷார்ட் வீடியோ மெசேஜ் அனுப்பும் போது, அதை அவர் கிளிக் செய்து திறந்தால் மட்டுமே குறிப்பிட்ட வீடியோவானது சவுண்ட் உடன் பிளே ஆகும். இல்லை என்றால் அது தானாகவே சத்தம் இல்லாமல் அவரது வாட்ஸ்அப் சாட் ஸ்க்ரீனில் பிளே ஆகும். இந்த வசதி உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like