இது தெரியுமா ? மெட்ரோ ரயில் டிக்கெட் வாட்ஸ்ஆப் மூலம் பெறுவது எப்படி..?

இந்தியாவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இந்த செயலியை பட்டி தொட்டி எங்கும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இதில் புகைப்படம், வீடியோ, குரல் அழைப்பு, செய்திகள், பணம் செலுத்துதல் மட்டுமில்லாமல் பல வகையான சேவைகளுக்கு பயன்படுகிறது. சமீபத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யவும் வாட்ஸ்ஆப் பயன்படுகிறது.
அது எவ்வாறு என்பது பற்றி பார்க்கலாம். அதற்கு முதலில் உங்கள் தொலைபேசியில் DMRC (டெல்லி மெட்ரோ) எண் 9650855800 என்பதை சேமிக்க வேண்டும். அதன் பின் வாட்ஸ்ஆப் சாட்டில் Hi என்று எழுதி மெசேஜ் அனுப்ப வேண்டும். பின் விருப்பமான மொழியை தேர்வு செய்ய வேண்டும். டிக்கெட் வாங்க அல்லது மீண்டும் டிக்கெட் பெற ஆப்சன் காட்டும்.
அதில் டிக்கெட்டுக்கான உங்கள் தொடக்க மற்றும் இறுதி ஸ்டேசனை உள்ளிட வேண்டும். தேவையான டிக்கெட்டுகளின் எண்ணிக்கையையும் உள்ளிட வேண்டும். டிக்கெட்டுக்கு பணம் செலுத்த உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தலாம். அல்லது WhatsApp Payment அல்லது UPI விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். பின் மெட்ரோ QR டிக்கெட் வரும். அதை பயன்படுத்தி மெட்ரோவில் பயணம் செய்யலாம்.
சென்னை மெட்ரோ:
8300086000 என்ற கைப்பேசி எண்ணுக்கு 'ஹய்' என்று குறுஞ்செய்தி அனுப்பி டிக்கெட்களை பெறலாம். டிக்கெட் எடுப்பது மட்டுமின்றி பிற வசதிகளுக்காகவும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். அருகில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களை கண்டறிதல், எந்த வழித்தடத்தில் எவ்வளவு நேரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்ற தகவல்களையும் இந்த வாட்ஸ்ஆப் எண் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பதற்கான இந்த வசதி, பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிச்சயமாக கூறலாம்.