இது தெரியுமா ? மாவே அரைக்காமல் சூடா மெதுவடை சுடுவது எப்படி..?

நீங்க மாவு ஊற வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இந்த ரெசிபியை டிரை பண்ணி செஞ்சு பாருங்க.
தேவையான பொருட்கள்
ரவை – 2 கப்
தயிர் – 1 1/2 கப்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – 1/2 துண்டு
சமையல் சோடா – 1/4 tsp
உப்பு – தே.அ
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
ரவையை ஒரு கிண்ணத்தில் கொட்டி அதில் தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
வடை பதம் வரவில்லை எனில் மீண்டும் கொஞ்சம் தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
இப்போது அதைத் தட்டுப்போட்டு மூடி 10 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
10 நிமிடங்கள் கழித்து பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, சமையல் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கலந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாகக் கடாய் வைத்து வடை சுடுவதற்கு ஏற்ப எண்ணெய் ஊற்றிக் காய வையுங்கள்.
பின் எப்போதும்போல் மாவை கொஞ்சமாக எடுத்துத் தட்டி போடுங்கள்.
சிலருக்கு வெங்காயம் சேர்த்தால் பிடிக்கும் எனில் வெங்காயமும் சேர்த்து சுடலாம்.
அவ்வளவுதான் சூடான மெதுவடை தயார்.