இது தெரியுமா ? மத்திய அரசு கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 வழங்கும் திட்டம்..!
பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசு, திருமணமான பெண்களுக்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் மாத்ரு வந்தனா யோஜனா. இத்திட்டம் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுவதற்காகவே பிரத்யேகமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.11,000 வழங்குகிறது.இந்த திட்டம் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச மருந்து, கர்ப காலம் மற்ரும் அதற்கு பின் அனைத்து பரிசோதனைகளுக்கும் வசதியை செய்து கொடுக்கும்.மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப காலங்களில் வெவ்வேறு காலங்களில் 3 தவணைகளில் கொடுக்கப்படும்.
இந்தத் திட்டம் இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறலாம். இந்தப் பணம் பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆனபிறகு வேலைக்குச் செல்லும் பெண்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள ஆஷா பணியாளரை சந்தித்து இத்திட்டத்தின் பலன்களை பெறலாம். விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 19 ஆண்டுகள். தகுதியுள்ள பெண்கள், கர்ப்ப காலத்தில் பதிவு செய்த பின், பிரசவம் முடிந்ததும் 3 ஆயிரம் வழங்கப்படும். பிரசவமாகி 14 வாரங்களுக்குப் பிறகு ரூ.2000 என மூன்று தவணைகளில் நிதிப் பலன்களை வழங்கும்.இந்த பணம் முதல் குழந்தைக்கு மட்டுமின்றி இரண்டாவது குழந்தைக்கும் வழங்கப்படுகிறது. இரண்டாவது பிரசவத்தில் குழந்தை பிறந்தால் தாய்க்கு ரூ.6,000 வழங்கப்படும் என மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், இந்த மையத்தில் இருந்து கர்ப்பிணி பெண்களுக்கு இரண்டு பிரசவங்களுக்கு மொத்தம், 11 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் பலன்களை பெற வேண்டும் எனில் உங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், உங்களிடம் பிபிஎல் ரேஷன் கார்டு அல்லது ஆயுஷ்மான் பாரத் யோஜனா கார்டு இருந்தால், இந்தத் திட்டத்தின் தகுதியான பலன்களைப் பெறலாம். Pmmvy.nic.in என்ற இணைய தளத்திலோ அல்லது வீட்டிலிருந்த உங்கள் அங்கன்வாடி மையத்திலோ இந்தத் திட்டத்தில் பதிவு செய்து பலன்களைப் பெறலாம்.
பயனாளியின் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்று, வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், மொபைல் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவை தேவைப்படும்.
இருப்பினும், இரண்டாவது குழந்தைக்கு நன்மைகளைப் பெற, கர்ப்ப காலத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். இது பிறக்கும் போது பாலின விகிதத்தை மேம்படுத்தவும், பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும் உதவும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான பெண்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் 7998799804 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசலாம்.