1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? இனி இணையவழி விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி..!

1

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடை பெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சா் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சா்களின் ஒப்புதலோடு இணையவழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றில் கட்டப்படும் முழு பந்தயத் தொகை மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் திருத்தச் சட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டமாக்கும் வகையில் கடந்த மாதம் மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. 

இதன்மூலம் ஏற்கனவே 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்யப்படும் இணையழி விளையாட்டுகள், குதிரைப்பந்தயம், சூதாட்ட விடுதிகள் ஆகியவையும் சோ்க்கப்பட்டன. மேலும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி வெளிநாடுகளில் இருந்து இணையம் மூலம் நடத்தப்படும் இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து உள்நாட்டு சட்டங்களில் குறிப்பிட்டுள்ள வரியைச் செலுத்த வேண்டும். இந்தச் சட்டம் நேற்று முதல் (1-ம் தேதி) அமலுக்கு வந்துள்ளது.  இச்சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு (2024, ஏப்ரல்) மதிப் பாய்வு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like