1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? இந்த ஒரு கார்டு இருந்தாலே ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை...3,000 ரூபாய் ஓய்வூதியம்..!

1

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் உட்பட பிற தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் அட்டை கார்டு மூலம் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

இ-ஷ்ரம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. 60 வயதுக்கு பிறகு, இ-ஷ்ரம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தில் ஊனமுற்ற தொழிலாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.500 முதல் ரூ.1000 வரை வழங்கப்படுகிறது.

வீடு கட்ட நிதியுதவி வழங்கப்படுகிறது. அரசின் அனைத்து நலத்திட்டங்களின் பலனை தொழிலாளர்கள் பெறலாம். தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் குழந்தைகளை ஆதரிக்க உதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற நிறைய நன்மைகள் இந்த  கார்டில் உள்ளன.

இந்த இ-ஷ்ரம் கார்டினை நீங்கள் பெற வேண்டுமானால், இதற்கு ஒருசில தகுதிகள் அவசியமாகிறது.. அதன்படி, அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் தொழிலாளி, இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இ-ஷ்ரம் கார்டு பெற வேண்டுமானால், முக்கிய ஆவணங்கள் சில தேவை.,.. விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர், வங்கி பாஸ்புக் போன்றவை தேவைப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது: இ-ஷ்ரம் கார்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதி உள்ள தொழிலாளர்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். E-Shram கார்டுக்கு விண்ணப்பிக்க, eshram.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். பிறகு அந்த வெப்சைட்டிலிருந்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து அருகிலுள்ள தொழிலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருவேளை வெப்சைட்டில் பதிவு செய்ய முடியாவிட்டால், அரசு இ-சேவை மையம் அல்லது CSC மையத்திற்குச் சென்று பதிவு செய்யலாம்.
 

Trending News

Latest News

You May Like