1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்..!

1

வரும் 12ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

“தமிழகத்தில் தீபாவளி நாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 06.00 மணி முதல் காலை 07.00 மணி வரையும், இரவு 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம்.

நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like