இது தெரியுமா ? ஏடிஎம் என்பது பணம் எடுப்பதற்கு மட்டுமல்ல...
ஏடிஎம் என்றாலே அனைவருக்குமே பணம் எடுப்பது நினைவுக்கு வருகிறது. ஆனால், ஏடிஎம் என்பது பணம் எடுப்பதற்கு மட்டுமல்ல, வங்கி தொடர்பான பல்வேறு பணிகளையும் வங்கிக்குச் செல்லாமல் அங்கேயே செய்து முடிக்க முடியும். ஏடிஎம் மூலம் செய்யக்கூடிய இந்த 9 விஷயங்கள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலில், கணக்கில் உள்ள இருப்பை சரிபார்க்க வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், இப்போது ஏடிஎம்மில் மினி ஸ்டேட்மென்ட் மூலம் உங்களின் கடைசி 10 பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கலாம்.
இணைய மோசடிகளைத் தவிர்க்க உங்கள் ஏடிஎம் பின் நம்பரை அடிக்கடி மாற்றுவது நல்லது. அப்படி உங்கள் ஏடிஎம் கார்டின் பின் நம்பரை மாற்ற விரும்பினால் ஏடிஎம்மிற்குச் சென்று அதைச் செய்யலாம்.
நீங்கள் ஒரு டெபிட் கார்டில் இருந்து மற்றொரு கார்டுக்கு பணத்தை மாற்றலாம். இதற்கு, நீங்கள் பணம் மாற்ற விரும்பும் கார்டு எண்ணுடன் ஏடிஎம் கார்டு, பின் ஆகியவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் இந்த வசதி இருக்கிறது.
ஏடிஎம் மூலம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்றலாம். ஒரு ஏடிஎம் கார்டுடன் அதிகபட்சம் 16 கணக்குகளை இணைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
நீங்கள் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் செலுத்த வேண்டும் என்றால், இந்த பணியை ஏடிஎம்மில் இருந்து எளிதாக முடிக்க முடியும். இதற்காக, எல்ஐசி, ஹெச்டிஎஃப்சி லைஃப் மற்றும் எஸ்பிஐ லைஃப் போன்ற பல காப்பீட்டு சேவை வழங்குநர்கள் வங்கிகளுடன் டை-அப் வைத்துள்ளன.
உங்கள் காசோலை தாள்கள் (leaf) காலியாக இருந்தால், புதிய காசோலை புத்தகத்தைப் பெற நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக ஏடிஎம்மில் புதிய காசோலைப் புத்தகத்தைக் கோரலாம்.
ஏடிஎம்மில் எந்தவொரு பயன்பாட்டு பில்களையும் நீங்கள் எளிதாக செலுத்தலாம். ஆனால், இதற்காக நீங்கள் வங்கியின் இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும்.
தற்போது பல வங்கிகள் கணக்கு தொடங்கியவுடன் இணைய வங்கி மற்றும் மொபைல் பேங்கிங் வசதியையும் வழங்குகின்றன. இருப்பினும், நீங்கள் இந்த சேவைகளை செயல்படுத்தவில்லை என்றால் இந்த பணியை ஏடிஎம்மில் எளிதாக முடிக்க முடியும்.