1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? ஆன்லைனில் ஆதார் திருத்தம்..இலவச சேவை..மத்திய அரசு அறிவிப்பு…!

1

ஆதார் கார்டில் உள்ள பெயர்,முகவரி,பிறந்த தேதி பாலினம்,போன் நம்பர்,இமெயில் ஆகியற்றை 10  ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது  மத்திய அரசு.

ஏனெனில், 10 ஆண்டுகளில் திருமணம் நடந்திருக்கும் பெண்கள் அவர்களது கணவர் பெயரை தந்தை பெயருக்கு பதிலாக இணைக்காமல் இருப்பார்கள். அதேபோல் வேறு பகுதிக்கு வீடு மாறிச் சென்றவர்கள் முகவரியை மாற்றாமல் இருப்பார்கள். மேலும், ஆதார் கார்ட்டில் கொடுத்த மொபைல் நம்பர், இமெயில் போன்ற விவரங்களும் மாறியிருக்கலாம். இதை சரி செய்யவே ஆதார் விவரங்களை புதுப்பிக்க மத்திய அரசு அறிவுருத்தியுள்ளது.

இந்நிலையில் ஆன்லைனில் ஆதார் விவரங்களை புதுப்பித்தால், ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படாது என்று தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இலவச அப்டேட் கெடு வரும் செப்டம்பர் 14ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நேரத்தில் ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது என்பதை  அறிந்துக்கொள்வோம்.

ஆதார் கார்டு பெயர் மாற்றுதல், ஆதார் கார்டு மொபைல் நம்பர் மாற்றுதல், ஆதார் கார்டு முகவரி மாற்றுதல், ஆதார் கார்டு இமெயில் மாற்றுதல் ஆகியவை அடங்கும். ஒருவேளை உங்களது குழந்தைகளுக்கு 15 வயது கடந்த பின்பு ஆதார் விவரங்களை புதுப்பிக்க விரும்பினால், அவர்களை அருகில் உள்ள ஆதார் சென்டருக்கு அழைத்து சென்று மாற்றுங்கள். ஏனென்றால், அவர்களின் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்-ஐ  பதிவு செய்ய முடியும்.

இதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அந்த பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் மை ஆதார்  டேபை கிளிக் செய்தால், அப்டேட் யுவர் ஆதார் ஆப்சன் தோன்றும். அதன்பின்பு அப்டேட் ஆதார் டீடெய்ல்ஸ் ஆன்லைன் என்னும் பக்கத்தை திறந்து அதில் இருக்கும் புரொசீட் டு அப்டேட் ஆதார் (Proceed to Update Aadhaar) ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது, உங்களது ஆதார் எண் கேட்கப்படும். அதை உள்ளீடு செய்யுங்கள். அதோடு கேப்ட்சா வெரிபிகேஷனும் செய்ய வேண்டும். இதை செய்துவிட்டால், உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்து லாகின் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு, நீங்கள் மாற்ற வேண்டிய பெயர், முகவரி போன்ற விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம். இப்படி அப்டேட் செய்த பின்பு உங்களின் மொபைல் நம்பருக்கும், இமெயிலுக்கும் அப்டேட் ரிக்கொஸ்ட் நம்பர் அனுப்பி வைக்கப்படும். அதை வைத்து நீங்கள் அப்ளிகேஷனை டிராக் செய்து கொள்ள முடியும். இந்த அப்டேட் 15 வேலை நாட்களுக்குள் உங்களது ஆதார் கார்ட்டில் புதுப்பிக்கப்பட்டுவிடும். அதன் பின்பு, நீங்கள் மீண்டும் UIDAI வெப்சைட்டுக்கு சென்று ஆதார் அட்டையை ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதுபோன்ற அப்டேட்டுக்கு முன்னதாக ரூ.50 பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது, செப்டம்பர் 14ஆம் தேதி வரையில், இலவசமாக இந்த சேவை வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like