இது தெரியுமா ? புதிய பென்சன் திட்டம் அறிமுகமாகியுள்ளது...அதுவும் குழந்தைகளுக்காக...!
நடந்து முடிந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் ஏஞ்சல் வரி நீக்கம் செய்யபப்ட்டுள்ளது. இதுதவிர குழந்தைகளுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்வதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பெண் குழந்தைகளின் நலனுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக ஒரு திட்டம் இணைந்துள்ளது. வத்சல்யா என்ற திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த திட்டம் என்பது சிறுவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டமாகும். அதாவது 18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு என்று அவர்களின் பெற்றோர் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 வயது வரும் வரை குழந்தைகளின் வங்கி கணக்கில் இந்த ஓய்வூதிய பங்களிப்பு தொகையை முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்பிறகு 18 வயது நிரம்பியதும் இது தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குழந்தைகளின் பெயருக்கு மாற்றம் செய்யப்படும்.இது ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். மைனர் குழந்தைகளுக்கான இந்த சிறப்புத் திட்டம் பெற்றோர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.என்பிஎஸ் வத்சல்யா திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், மைனர் குழந்தை வயது வந்தவுடன், NPS வத்சல்யா திட்டத்தை தடையின்றி சாதாரண NPS கணக்காக மாற்றலாம். NPS திட்டம் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு திட்டமாகும். NPS என்பது தேசிய பென்சன் திட்டம்.இந்த தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் NPS கணக்கைத் திறக்கலாம். இதன் கீழ் ஓய்வுக்குப் பிறகு, உங்களுக்கு வழக்கமான வருமானம் வழங்கப்படும். தேசிய பென்சன் திட்டமானது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும் போது கணக்கு வைத்திருப்பவர்கள் மொத்த தொகையைப் பெறுவார்கள். இது தவிர, மாதாந்திர ஓய்வூதிய வசதியும் இதில் உள்ளது.
தேசிய பென்சன் திட்டத்தில் தற்போது வயது வந்தவர்கள் பயன்பெற்று வரும் நிலையில், அத்திட்டத்தை குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த வத்சல்யா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
.png)