1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ?சென்னையில் இன்று 9 மின்சார ரெயில்கள் ரத்து..!

1

பராமரிப்பு பணி காரணமாக இன்று 9 மின்சார ரெயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் தெரிவித்திருப்பதாவது:

 சென்னை மூர் மார்க்கெட் முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயிலும், சென்னை மூர் மார்க்கெட் முதல் திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலும், அரக்கோணம் முதல் சென்னை மூர் மார்க்கெட் வரை செல்லும் மின்சார ரயிலும், திருத்தணி முதல் சென்னை மூர் மார்க்கெட் வரை செல்லும் மின்சார ரயிலும் (செப்.13) ஒருநாள் மட்டும் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதி வரை செல்லும் மின்சார ரயிலும் (செப்.13) ஒருநாள் மட்டும் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like