1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? பிரஷர் குக்கரில் சமைக்க கூடாத 7 உணவுகள்..!

1

அரசி:  பெரும்பாலானோர் அரிசியை குக்கரில் தான் சமைக்கின்றனர். இப்படி செய்வதால் உடலுக்கு நேரடி தேவையற்ற கொழுப்பு சேர வழி வகுக்கும். குக்கரில் அரிசி சமைக்கும் போது  ஸ்டார்ச், ஒரு ரசாயனத்தை உருவாக்குகிறது, இது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


வறுத்த உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது. ஏனெனில் சமைக்க உலர்ந்த வெப்பத்திற்கு பதிலாக ஈரப்பதமான வெப்பத்தை பிரஷர் குக்கர் பயன்படுத்துகின்றது.முட்டையை பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது. வெப்பம் அதிகரிக்கும் போது முட்டை வெடித்து ஒட்டிக் கொள்ளும். சில தருணங்களில் முட்டை வெள்ளைக்கரு முழுவதும் வெளிவரவும் வாய்ப்புள்ளது.

கீரை: பிரஷர் குக்கரில். கீரையை சமைக்கக் கூடாது. பொதுவாக கீரை சமைக்கும் போது வெப்பநிலை குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் கீரை உள்ள சத்துக்கள் பாதுகாக்கப்படும். ஆனால் பிரஷர் குக்கரில் விரைவாக அதிக வெப்ப நிலையில் கீரையை சமைப்பதால் அதிலுள்ள சத்துக்கள் குறைகிறது. அதோடு கீரை பஞ்சு போல் ஆகிவிடும். இப்படி சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்களை உண்டாக்குகிறது.

பிஸ்தா: பிஸ்தாவின் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதோட சர்க்கரை கட்டுப்பாடு, கண் ஆரோக்கியம், போன்ற சில நன்மைகள் பிஸ்தாவில் உள்ளது. குக்கரில் பிஸ்தாவை சமைக்கும் போது அதிக வெப்பநிலை காரணமாக தேவையற்ற கொழுப்புகள் அதில் சேரும். மேலும் அதன் சத்துகளும் குறைகிறது. இதனால் உடலுக்கு எதிர்வினையை ஏற்படுத்தும்.

மீன் : மீனை குக்கரில் சமைப்பதால், அதிக வெப்பநிலை காரணமாக ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டுகள் அழிக்கப்படுகின்றன. அதோடு மீனின்சுவையும் குறைந்துவிடும், மீனை சாதாரணமாக சமைத்தால் தான் சத்துகளையும் சுவையும் அளிக்கும்.


காய்கறி:  காய்கறிகளில் மினரல்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது முற்றிலும் அழிந்துவிடும். அதனால்தான் பெரும்பாலான காய்கறிகள், குறிப்பாக பச்சை இலை காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் அல்லது கடாயில் சமைப்பதை சிறந்தது.


உருளைக்கிழங்கு:  உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் சமைப்பது சரியானது அல்ல. உருளைக்கிழங்கில் அதிகமாக மாவுச் சத்து உள்ளது. குக்கரில் ஏற்படும் அதிக வெப்பநிலை உருளைக்கிழங்கின் மாவுச்சத்தை குறைக்கிறது. இது தவிர, வேகவைத்த உருளைக்கிழங்கில் அதிக அளவு ஆன்டி-நியூட்ரியன்கள் இருப்பதால் உடலுக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்காது.

Trending News

Latest News

You May Like