இது தெரியுமா ? இந்த 5 நாடுகளில் காதலர் தினம் கொண்டாட தடை!!

மலேசியா: மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. காதலர் தினம் கொண்டாட இங்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தடை கடந்த 2018 விளக்கி கொள்ளப்பட்டது. இருந்தும் இந்த நாட்டில் பெரிதாக கொண்டாடப்படுவதில்லை
சவுதி அரேபியா: சவூதி அரேபியாவில் கூட காதலர் தினத்தை கொண்டாடினால் கைது செய்யப்படுவார்களாம். மேலும், இது இளைஞர்களிடம் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
ஈரான்: ஈரானில் 2010ம் ஆண்டு முதல் காதலர் தினத்தை கொண்டாட தடை உள்ளது. இங்குள்ள அரசு இதை தார்மீக சீரழிவு விழாவாக கருதுகிறது. காதலர் தினம் தொடர்பான பரிசுகள் மற்றும் பொருட்களை விற்பது ஈரானிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் காதலர் தினத்திற்கு எதிராக உள்ளது. அங்குள்ள நீதிமன்றம் இஸ்லாமியக் கல்விக்கு எதிரானதாகக் கருதுகிறது. காதலர் தினம் பாகிஸ்தானில் எங்கும் கொண்டாடப்படுவதில்லை.
உஸ்பெகிஸ்தான்: உஸ்பெகிஸ்தானில் 2012க்குப் பிறகு காதலர் தினம் தடை செய்யப்பட்டது. இங்குள்ள மக்கள் பாபரின் பிறந்தநாளை பிப்ரவரி 14 அன்று கொண்டாடுகிறார்கள். உஸ்பெகிஸ்தான் மக்கள் பாபரை தங்கள் ஹீரோவாகக் கருதுகிறார்கள்.