இப்படி ஒரு கிராமம் இருக்கு தெரியுமா ? நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுக்கு பின் மின்சார வசதி..!

சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் பல பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் உள்ளது. பல இடங்களில் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் நக்சல்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் 113 நக்சல்கள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுஉள்ளனர்.
அவர்களில், 93 பேர் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பஸ்தார் என்ற பகுதியை சேர்ந்தவர்கள். இந்நிலையில், நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த பிஜப்பூர் மாவட்டத்தின் டிம்னார் கிராமம், 77 ஆண்டுகளுக்கு பின் மின்சார வசதி பெற்று உள்ளது.
இக்கிராமத்தில், 53 வீடு களே உள்ளன. மின்சார வசதி கிடைத்துள்ளதற்கு முதல்வர் விஷ்ணு தியோ சாய்க்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.