மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் காதில் கேட்கும் குரல் அந்த நடிகரோடது தெரியுமா ?

‘மண்டேலா‘ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாவீரன்’. வரும் ஜூலை 14-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேண்டஸி மற்றும் ஆக்ஷனில் உருவாகியுள்ள இந்த படம் சிவகார்த்திகேயனின் வழக்கமான திரைப்படமாக இருக்காது என கூறப்படுகிறது. இந்த படத்தில் காமிக்கை வரையும் ஆர்ட்டிஸ்டா சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த டிரெய்லரில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் காதில் ‘வீரமே ஜெயம்’ என்ற கேட்கும். அதை வைத்துதான் படத்தின் கதைக்களம் நகரும். அந்த குரலை கொடுத்த முன்னணி நட்சத்திரம் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த குரலை கொடுத்தது யார் என்பதை சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதன்படி சிவகார்த்திகேயன் காதில் கேட்டு குரல் நடிகர் விஜய் சேதுபதியுடையது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அன்பு சகோதரர் விஜய் சேதுபதிக்கு நன்றி. மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலால் இத்தனை நாட்களாக வைக்கப்பட்டிருந்த சஸ்பென்ஸ் உடைந்துள்ளது.
My dear brother @VijaySethuOffl thank you for your kind gesture 🤗
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 11, 2023
மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி ❤️❤️🤗🤗
- Sivakarthikeyan#Maaveeran#VeerameJeyam #MaaveeranFromJuly14th pic.twitter.com/Nobb7HOIhC