1. Home
  2. தமிழ்நாடு

நீங்கள் பிறந்த அன்றே உங்கள் வாழ்க்கை முடிவு செய்யப்படுகிறது- எப்படி தெரியுமா..?

நீங்கள் பிறந்த அன்றே உங்கள் வாழ்க்கை முடிவு செய்யப்படுகிறது- எப்படி தெரியுமா..?


உங்களுக்கான சரியான தொழிலைத் தேர்ந்தெடுக்க, உங்களுடைய பிறந்த தேதி எண் மற்றும் அதனுடைய விதியின் எண் இரண்டையும் பார்க்க வேண்டும் என்று எண் கணிதம் குறிப்பிடுகிறது.

பிறந்த தேதி: ஒருவருடைய பிறந்த தேதி என்பது, அவருடைய பிறந்த தேதியின் கூட்டுத்தொகை மூலம் கிடைத்த ஒற்றை இலக்க எண் ஆகும். அதாவது நீங்கள் 14-ம் தேதி பிறந்திருந்தால், உங்களுடைய பிறந்த தேதி எண் 1+4=5 என்பதே ஆகும்.

விதி எண்: ஒருவருடைய முழு பிறந்த தேதியையும் கூட்டி, அதன்மூலம் கிடைக்கும் ஒற்றை இலக்க எண் வித் எண் என்பதாகும். உங்களுடைய பிறந்த தேதி என்பது 14.4.2001 என்றால், உங்களுடைய விதி எண் 3 ஆகும்.

சுபிட்சமான எண்கள்: நீங்கள் 11 அல்லது 22-ம் தேதிகள் பிறந்தவர் என்றால், அதுதான் சுபிட்சமான எண்கள். இதற்கு சில கூடுதல் முக்கியத்துவம் உள்ளன. நீங்கள் ஒருவேளை 29-ம் தேதியில் பிறந்தவர்கள் என்றால், அது 11 என்று கணக்கில் வைக்கப்படும். இதுதான் சுபிட்சமான எண் என்று குறிப்பிடப்படுகிறது. இரண்டு இலக்க எண்ணாக ஒரே எண் வரும் போது அவை சுபிட்சமான எண்களாக வரையறுக்கப்படுகின்றன.

ஒன்று என்கிற கூட்டுத்தொகை கொண்டவர்கள் தலைமை பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள். இரண்டு என்கிற கூட்டுத்தொகை இருந்தால் மென்மையான குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். மூன்று என்கிற கூட்டுத்தொகை வந்தால் அவர்களுக்குள் நகைச்சுவை உணர்வு நிரம்பி வழியும். நான்கு என்கிற கூட்டுத்தொகை இருந்தால் அவர்களுக்குள் பன்முக திறமை இருக்கும்.

ஐந்து என்கிற கூட்டுத்தொகை கொண்டவர்கள் புத்தி கூர்மை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆறு என்கிற கூட்டுத்தொகை கொண்டவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள். ஏழு என்கிற கூட்டுத்தொகை கொண்டால் அவர்களுக்குள் ஆன்மிக ஞானம் பெருக்கெடுத்து ஓடும். ஒன்பது என்கிற கூட்டுத்தொகை இருந்தால் அவர்கள் வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள்.

ஒருவேளை சுபிட்சமான எண்களை பெற்றவர்களாக இருந்தால், அவர்கள் அனைத்து விஷயங்களிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். கலை, செயல்பாடு, ஆக்கத்திறன் என அனைத்து விஷயங்களும் அவர்களுக்கு கைக்கூடி வரும்.

Trending News

Latest News

You May Like