1. Home
  2. தமிழ்நாடு

பான் கார்டில் இருக்கும் பிழைகளை எவ்வாறு வீட்டில் இருந்தபடியே சரி செய்வது தெரியுமா ?

1

இந்திய குடிமகனின் வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என ஆகிய முக்கிய தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. இந்த பான் கார்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை கட்டாயமாக திருத்தம் செய்திருக்க வேண்டும். தற்போது எப்படி வீட்டில் இருந்தபடியே பான் கார்டில் இருக்கும் தவறுகளை சரி செய்வது என்பதை குறித்து பார்க்கலாம். முதலில் NSDLன் அதிகாரப்பூர்வ போர்டலுக்கு சென்று அதில் பான் கார்டினை திருத்துவதற்கான விருப்பத்தை கிளிக் செய்து கொள்ள வேண்டும். அதில் உங்களது தகவல்களை நிரப்பி பதிவு செய்யவும்.

புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தில் ‘Application Type’ -> ‘Changes or Correction in Existing PAN card’ என்பதைத் தேர்வு செய்யவேண்டும்.

பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்தப் பக்கத்தில் பூர்த்தி செய்த உடன் அளிக்கப்படும் டோக்கன் எண்ணை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த டோக்கன் எண் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும். பின்னர், உங்களது மெயில் ஐடிக்கு வரும் அந்த லிங்கை கிளிக் செய்து பான் கார்டு புதுப்பிப்பதற்கான பக்கத்தை திறந்து அதில் உங்களது விவரங்களை பதிவு செய்யவும். பின்னர் அதில் கேட்கப்படும் ஆவணங்களையும் பதிவு செய்து பணம் செலுத்தும் செயல்முறையை தொடர வேண்டும். இந்த முழு செயல்முறையையும் முடித்த பிறகு தபால் மூலமாக தேவையான தகவல்களையும் அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் புதிய பான் கார்டு உங்களது முகவரிக்கு அனுப்பப்படும்.

Trending News

Latest News

You May Like