கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கணும் தெரியுமா ?

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள் :
1). குடும்பத் தவைவிகளுக்கான கலவைளர் மகனிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது செப்டம்பர் 15,2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2). இத்திட்டத்திற்கு பொது விநியோக நியாயவிலைக்கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்து கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக்கடை அமைந்திருக்கும் விண்ணப்பப்பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
3). ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
குடும்பத் தலைவி வரையறை
- குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு 'குடும்பமாகக் கருதப்படுவர்.
- ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
- குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்ப தலைவியாகக் கருதப்படுவார்,
- குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.
- திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள். தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.
- ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.
பொருளாதாரத் தகுதிகள்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களைக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.
1). ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்...
2). ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
3) ஆண்டிற்கு விட்டு உபயோகத்துக்கு 3600 யூணிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்
பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.