1. Home
  2. தமிழ்நாடு

‘விடாமுயற்சி’ பட முதல் வசூல் எவ்வளவு தெரியுமா?

Q

விடாமுயற்சி திரைப்படம் நேற்று (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி படத்தை இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு இசை அமைத்திருந்தார்.

ஹாலிவுட் படத்தை தழுவி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.

வில்லன் கும்பலால் கடத்தப்பட்ட தன் மனைவி திரிஷாவை நடிகர் அஜித் எப்படி தேடி கண்டுபிடிக்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை. எந்தவித பில்டப்பும் இல்லாமல் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் முதல் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. சாக்னில்க் (Sacnilk) இணையதளத்தின்படி, விடாமுயற்சி திரைப்படம் இந்திய அளவில் 22 கோடியும் தமிழ்நாட்டில் மட்டும் 21.5கோடியும் வசூல் செய்துள்ளது. உலகளவில் 30கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அஜித்தின் முந்தைய படங்களான துணிவு மற்றும் வலிமை ஆகியவற்றின் முதல் நாள் வசூலை விட குறைவு. தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் துணிவு 23 கோடியும், வலிமை 31 கோடியும் வசூல் செய்திருந்தது. மேலும் விடாமுயற்சி முதல் நாளில் மட்டும் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

விடாமுயற்சி’ திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக முதல் வசூலை வெளியிடவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக வட அமெரிக்காவில் அஜித் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படமாக விடாமுயற்சி மாறியுள்ளது. வட அமெரிக்காவில் முதல் நாளில் மட்டும் இந்திய மதிப்பிற்கு 3.26கோடி வரை வசூல் செய்துள்ளது.


 

Trending News

Latest News

You May Like