குறைந்தது தங்கம் விலை- ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?

தங்க நகை உயர்வு காரணமாக நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தை மாதம் பிறந்து முகூர்த்த நாட்களில் அதிகளவிலான திருமணங்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்க திட்டமிட்டவர்களுக்கு கூடுதலாக பல லட்சங்கள் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 5ஆயிரம் ரூபாய் அளவிற்கு படிப்படியாக அதிகரித்துள்ளது
இந்த விலை உயர்வானது இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் படி ஒரு சவரன் இந்தாண்டு இறுதிக்குள் 80ஆயிரத்தை தாண்டும் என தங்க நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை கூறி வருகிறார்கள். எனவே தற்போதே தங்கத்தை வாங்கி வைத்தால் லாபம் கிடைக்கும் என அதிகளவில் உயர்வகுப்பு மக்கள் தங்கத்தை வாங்க தொடங்கியுள்ளனர்
கடந்த சனிக்கிழமை (ஜன.25ஆம் தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,555க்கும், ஒரு சவரன் ரூ.60,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஜன.27ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,540க்கும் ஒரு சவரன் ரூ. 60,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,220க்கும், ஒரு சவரன் ரூ.49,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.