1. Home
  2. தமிழ்நாடு

1986-ல் புல்லட் பைக் எவ்வளவு தெரியுமா?

1

இந்தியாவில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350.

இந்த மோட்டார் சைக்கிளின் வடிவமைப்பு காலப்போக்கில் மாறிவிட்டது என்றாலும், மொத்தத்தில் பைக்கின் டிசைன் இன்னும் கிட்டத்தட்ட அப்படியேதான் உள்ளது. ஒருவேளை அதனால்தான் இன்றும் இந்த பைக் மீதான மக்களின் அன்பு மாறவில்லை.

ராயல் என்ஃபீல்டு தங்கள் பைக்குகளின் அம்சங்களை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. அதனால் மக்கள் மத்தியில் அதன் புகழ் தொடர்கிறது.
இதில் அம்சங்கள் அப்டேட் ஆகி வருவதால் இந்த மோட்டார் சைக்கிளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 தற்போது ரூ. 1,50,795 முதல் ரூ. 1,65,715 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ. 1.8 லட்சம் ஆகும். ஆனால் உங்களுக்கு தெரியுமா? 1986ஆம் ஆண்டு புல்லட்டின் விலை 18,700 (ஆன்ரோடு) ரூபாய் ஆகும்.

சமீபத்தில் 1986-ல் வாங்கிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350-ன் பில் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பைக்கின் விலை எழுதப்பட்டிருப்பதை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

பைக்கின் ஆன்ரோடு விலை வெறும் ரூ. 18,700 என்று அந்த பில்லில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பில் 1986ஆம் ஆண்டுக்கு முந்தையது, அதாவது கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் பழமையானது.

Trending News

Latest News

You May Like