1. Home
  2. தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது தெரியுமா?

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது தெரியுமா?


குழந்தைகளை பொருத்தவரை கிறிஸ்துமஸ் தாத்தா, பரிசு பொருட்கள், நட்சத்திரம் இவை தான் முதலில் நினைவுக்கு வரும் அதன் பின்பு தான் கிறிஸ்துமஸ் மரம், குடில், புத்தாடைகள் போன்றவை நினைவுக்கு வரும். சரி அது ஒரு பக்கம் இருக்க...

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது தெரியுமா?

உணவு பிரியர்களுக்கு கிறிஸ்துமஸ் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கேக் தான்... அப்படிப்பட்ட ”கேக்”கிற்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் என்ன தொடர்பு? கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததா மாறியதுன்னு இப்போ பார்க்கலாம்...

14ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலக்கட்டடத்தில், கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய நாள் "விஜில்" என்னும் உண்ணா நோம்பு இருப்பதை மக்கள் கடைபிடித்து வந்தனர். இந்த நோம்பு இருப்பவர்கள் மறுநாள் சாப்பிடுவதற்கு இதமானதும், செரிக்க கூடிய தன்மையுடையதுமான ஓட்ஸ் கஞ்சியை பருகுவர். இது பாரிட்ஜ் என அழைக்கப்பட்டது. இது சற்று கூழ்ம தன்மையுடனும், திடமானதாகவும் அதாவது வெண்ணெய் போன்று இருந்தது. பின்னர் 16ம் நூற்றாண்டில் வசதி படைத்தவர்கள் கோதுமை மாவில் உலர்ந்த பழங்களை சேர்த்து கேக்காக உருவாக்கினர். இதுவே நாளடைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது தெரியுமா?

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவு பிசைந்து கேக் செய்வர். அப்போது, குடும்ப தலைவி ஒரு நாணயத்தை அந்த மாவுடன் கலந்து வைப்பார். இறுதியில் கிறிஸ்துமஸ் அன்று கேக் வெட்டி குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது தெரியுமா?

அப்போது அந்த நாணயம் யாருக்கு கிடைக்கிறதோ அவரே அதிர்ஷ்டசாலியாக கருதப்படுவார். அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பரிசுகள் வழங்குவர். இதனால் கேக் தயாரிக்கப்பட்ட நாளில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை ஆரம்பித்து விடும். குடும்ப உறுப்பினர்கள் அந்த நாணயம் யாருக்கு வரும் என்ற எதிர்ப்பார்ப்போடே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவர்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது தெரியுமா?

ஆனால், தற்போது மாறிவரும் நாகரீகம் காரணமாக கேக்குகள் வீடுகளில் தயாரிக்கப்படுவதில்லை.. பேக்கரிகளில் தயாரிக்கப்படும் கேக்குகளை வாங்கி கிறிஸ்துமஸ் அன்று வெட்டி அனைவருக்கும் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். எனவே, இப்போது யார் அதிக சுவையோடு கேக் செய்கிறார்கள், அழகான பல்வேறு உருவங்களில் கேக் செய்கிறார்கள் என பேக்கரி நிறுவனங்களிடையே போட்டி நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இத்தாலியின் மிலன் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் மிகப்பெரிய கேக் செய்யப்பட்டது. 140 கிலோ எடை கொண்ட இந்த கேக் உலகின் மிகப்பெரிய பன்டோன் கேக் என்ற பெருமையை பெற்றது.

இப்படி, கேக் பல்வேறு உருவங்களில் பல்வேறு விதமாக மாறிவந்தாலும், "கிறிஸ்துமஸ் என்றால் கேக் - கேக் என்றால் கிறிஸ்மஸ்" என ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது. இதனை எப்போதும் மாற்ற முடியாது.

Trending News

Latest News

You May Like