நடிகர் முரளியின் தம்பி யார் தெரியுமா? இப்போது தமிழ் சினிமாவின் மிரட்டல் வில்லன் அவர்தான்!!

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட நடிகர் முரளி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். அவரது மகன் அதர்வாவும் நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடிகர் முரளி கடந்த 2010ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். முரளியின் தம்பியும் தமிழ் சினிமாவின் திறமையான நடிகர் தான். அவர் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி. முரளியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு பிறந்தவர் முரளி. இரண்டாவது மனைவிக்கு பிறந்தநாள் டேனியல் பாலாஜி. தன்னுடைய அண்ணன் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த காலத்திலும் கூட அவரது பெயரை பயன்படுத்தாமல் சுயமாக முன்னேறியவர் டேனியல் பாலாஜி.
பசி, பட்டினி என அனைத்தையும் பொறுத்துக் கொண்டு தன்னுடைய திறமையால் திரையில் இடம் பிடித்திருப்பவர். முரளி இறந்த பிறகு தான் அவர் தன்னுடைய சகோதரர் என்பதையே டேனியல் பாலாஜி வெளியே கூறினார்.
newstm.in