இந்த வினோத கலாச்சாரம் பற்றி தெரியுமா.? கணவன் உயிருடன் இருக்கும் போதே தாலியை அறுத்து விரதம் இருக்கும் பெண்கள்..!
காஜ்வாகா என்ற சமுதாய மக்களில் உள்ள திருமணமான பெண் தான் குறிப்பாக காலம் கணவன் உயிருடன் இருக்கும் போதே மனைவி விதவையாக வாழும் கலாச்சாரத்தை கொண்டவர். இந்த வழக்கத்தை அவர்கள் வெகு நாட்களாக கடைபிடித்து வருகின்றனர். இப்படி செய்தால் தான் தன் கணவரின் ஆயுள் நிலைக்கும் என நம்புகின்றனர்.
இந்த சமுதாய மக்கள் பெரும்பாலும் உ.பி மாநிலத்தின் கிழக்கு பகுதியில் வசிக்கின்றனர். இந்த சமுதாய மக்கள் பெரும்பாலும மரத்திலிருந்து பதநீர் இறக்கும் பணியை செய்வார்கள். இந்த பணி வருடத்தில் 5 மாதம் மட்டுமே இருக்கும்து. இப்படியாக கணவர் பதநீர் இறக்க செல்லும் காலத்தில் வீட்டில் மனைவி மனைவி விதவையாக இருக்க வேண்டும்.
விதவை என்றால் தலையில் பூ வைக்காமல், பொட்டு வைக்காமல் மேக்அப் போட்டுக்கொள்ளாமல் இருப்பார்கள். முக்கியமாக சோகமான மன நிலையில் உண்மையில் கணவனை பரிகொடுத்ததை போலவே இருப்பார்கள்.
இந்த சமுதாய மக்கள் தற்குலஹா என்ற அம்மனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். இவ்வறாக விதவை விரத காலத்தில் இந்த பெண்கள் தங்களுக்கான நகைகள், மேக் அப் பொருட்களை எல்லாம் பெண்கள் அந்த குல தெய்வ கோவிலில் கொண்டு வைத்து விடுகிறார்கள்.
பதநீர் பறிக்கும் பணி என்பது மிகவும் ரிஸ்கான பணி கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில் தான் அவர்களின் பணி இருக்கு. அதனால் அந்த விரத காலங்களில் வீட்டில் பெண்கள் தன் கணவர் உயிருடன் பணியை முடித்விட்டு வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.
இந்த பழக்கம் குறிப்பாக அந்த சமுதாய மக்களிடம் மட்டும் தான் இருக்கிறது வேறு எங்கும் காண முடியாது. சில பழக்கங்கள் மாறுபட்டாலும் தாலி பழக்கம் மாறுபடாது. ஆனால் இந்த சமுதாய மக்கள் தாலியை கழட்டி வைத்து விதவையாகவே வாழ்கின்றனர்.